ஆனாலும் விஜய்க்கு ஓவர் குறும்புதான்.. பர்த்டே பேபியை இப்படியா மீம்ஸ் போட்டு கலாய்க்கறது?
நடிகை ராஷ்மிகாவின் பிறந்தநாளுக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா தனது பட நாயகிக்கு வித்தியாசமாக மீம்ஸ் போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அர்ஜூன்ரெட்டி என்ற ஒரே படம் மூலம் தமிழிலும், தெலுங்கிலும் அதிக ரசிகர்களை சம்பாதித்தவர் விஜய் தேவரகொண்டா. அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் படமும் மாபெரும் வெற்றி பெற்றதால், முன்னணி நடிகர்களுள் ஒருவரானார்.
பிரபலமானால் கூடவே பிரச்சினையும் வருவது சகஜம் தானே. கீத கோவிந்தம் படத்தில் நாயகியாக நடித்த ராஷ்மிகாவுடன் காதல் என விஜய் தேவரகொண்டா கிசுகிசுவில் சிக்கினார்.

காதல் கிசுகிசு:
ஆனால், அதைப் பற்றி கவலைப்படாத அந்த வெற்றி ஜோடி மீண்டும் தற்போது டியர் காம்ரேட் படத்தில் சேர்ந்து நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லரில் இடம் பெற்றிருந்த முத்தக் காட்சி, மீண்டும் அவர்களது காதல் கிசுகிசுவை தூசு தட்டியது. ஆனால், வழக்கம் போல், அது தொடர்பாக விளக்கம் ஏதும் தரவில்லை.

விஜய்யின் வாழ்த்து:
இந்நிலையில் நேற்று ராஷ்மிகாவின் பிறந்தநாள். அவருக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூகவலைதளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களைக் கூறினார். அந்த வரிசையில் விஜய் தேவரகொண்டாவும் ஒரு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.
மீம்ஸ்:
ஏதோ டியர் காம்ரேட் படக் காட்சியாக இருக்கும் என நினைத்த ரசிகர்கள், விஜய் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அது, ஒரு வீடியோ மீம்ஸ். அதில், ராஷ்மிகாவுக்கு ரசிகர் ஒருவர் முத்தமிடுவது போன்ற காட்சியும் இருந்தது.
சமாதானம்:
இந்த வித்தியாசமான ட்ரோல் வாழ்த்தைப் பார்த்த ரசிகர்கள், ‘ஆனாலும் விஜய்க்கு குறும்பு அதிகம்' என செல்லமாக திட்டி வருகின்றனர். ஆனால், இந்த பதிவை ராஷ்மிகா ரசிக்கவில்லை போலும். அதனால் தான், உடனடியாக அவரை சமாதானம் செய்யும் விதத்தில் மற்றொரு வாழ்த்துப் பதிவை வெளியிட்டு விட்டார் விஜய். பிழைக்க தெரிந்த மனிதர் தான்.

பர்ஸ்ட் லுக்:
இந்த இரண்டாவது வாழ்த்தை டியர் காம்ரேட் படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் பற்றிய பர்ஸ்ட் லுக் போஸ்டராக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அவரது பெயர் லில்லி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதி அவர் தொடர்பான பாடலை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications