Rashmika Mandanna: கையும் களவுமாக சிக்கிய ராஷ்மிகா... பணத்துக்காக இப்படியா பண்ணுவீங்க?

ஹைதராபாத்: ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட்டிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருவதே ராஷ்மிகாவின் வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் ராஷ்மிகா.

 Rashmika Mandanna gets trolled for eating Chicken in an advertising

கையும் களவுமாக சிக்கிய ராஷ்மிகா:கிரிக் பார்ட்டி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் என்ட்ரியான ராஷ்மிகா, தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடித்த பின்னர் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். அதேபோல், அல்லு அர்ஜுனுடன் நடித்த புஷ்பா திரைப்படமும் ராஷ்மிகா மந்தனாவுக்கு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.

இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு, இந்தியில் குட்பை, அனிமல் போன்ற படங்களில் நடித்திருந்தார். குறுகிய காலத்தில் பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். விஜய் தேவரகொண்டாவுடன் காதல், காந்தாரா ஹிரோ ரிஷப் ஷெட்டியுடன் மோதல் என தொடர்ச்சியாக லைம் லைட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 Rashmika Mandanna gets trolled for eating Chicken in an advertising

இந்நிலையில், அடிக்கடி தன்னை வெஜிடேரியன் என கூறிக்கொள்ளும் ராஷ்மிகா மந்தனா, தற்போது ஒரு விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். சைவத்துக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்த ராஷ்மிகா, தற்போது சிக்கன் விளம்பரத்தில் நடித்துள்ளார். பிரபலமான மெக்டொனால்டு விளம்பரத்தில் ராஷ்மிகா மந்தனா சிக்கன் சாப்பிடுவதை போல நடித்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

 Rashmika Mandanna gets trolled for eating Chicken in an advertising

எப்போதும் தன்னை வெஜிடேரியன் என கூறிக் கொண்டிருக்கும் ராஷ்மிகா, பணத்துக்காக இப்படியொரு விளம்பரத்தில் நடிக்கலாமா என கேட்டுள்ளனர். இப்போது சிக்கன் சைவத்தில் சேர்ந்துவிட்டதா எனவும் அவரை கேள்விக் கேட்டு ட்ரோல் செய்து வருகின்றனர். சொல்வது ஒன்றும் செய்வதும் ஒன்றுமே ராஷ்மிகாவின் வாடிக்கையாகிவிட்டது, பணம் என்றால் இப்படியா எல்லாவற்றையும் மறந்துவிடுவது என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஆனால், இதுகுறித்து ராஷ்மிகா தரப்பில் இருந்து எந்த பதிலும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X