அந்த நடிகருடன் காதலா…? இது ரொம்ப அழகா இருக்கே... ரசிகர்களை குழப்பும் ராஷ்மிகா மந்தனா

ஐதராபாத்: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.

தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்த பின்னர் ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட் உயரத் தொடங்கியது.

இந்நிலையில், பிரபல நடிகருடன் ராஷ்மிகாவுக்கு காதல் என்ற செய்திகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

கீதா கோவிந்தம் ராஷ்மிகா

கீதா கோவிந்தம் ராஷ்மிகா

2016ல் கன்னடத்தில் ரிலீஸான 'கிரிக் பார்ட்டி' படம் மூலம் திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தெலுங்கிலும் நடிக்கத் தொடங்கினார். விஜய் தேவரகொண்டா ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த 'கீதா கோவிந்தம்' படம் தான் அவரை உச்சத்தில் கொண்டுபோய் வைத்தது. முக்கியமாக க்ளைமேக்ஸில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஒரு லிப்லாக் கிஸ் அடித்து வேற லெவலில் ட்ரெண்டானார் ராஷ்மிகா. தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

சுல்தான் டூ வாரிசு

சுல்தான் டூ வாரிசு

சுல்தான் படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. தமிழில் 'சுல்தான்', தெலுங்கில் 'புஷ்பா' என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ராஷ்மிகாவுக்கு விஜய்யுடன் 'வரிசு' படத்தில் நடிக்க ஜாக்பாட் கிடைத்தது. இந்த சான்ஸை விட்டுவைக்காத ராஷ்மிகா, இப்போது விஜய்யுடன் டூயட் பாடி வருகிறார். அதேபோல் இந்தியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'குட்பை' படத்திலும் நடித்துள்ளார் இந்தத் திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது.

அந்த நடிகருடன் காதல்

அந்த நடிகருடன் காதல்

தமிழ், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து தற்போது இந்தியிலும் அறிமுகமாகும் ராஷ்மிகாவுக்கு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், ராஷ்மிகாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. 'கீதா கோவிந்தம்' படத்தில் நடிக்கும் போதே இருவருக்குமான கெமிஸ்ட்ரி சும்மா அள்ளியது. அதுவும் அந்த லிப்லாக் கிஸ் இப்போதும் வேலை செய்யுது போல என ரசிகர்கள் கூறி வந்தனர்.

ராஷ்மிகா ஓப்பன் டாக்

ராஷ்மிகா ஓப்பன் டாக்

இந்நிலையில், இதுகுறித்து ராஷ்மிகா மந்தனா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "இந்த வதந்திகள் எல்லாம் ரொம்ப அழகா இருக்குது" எனக் கூறியுள்ளார். அர்ஜுன் ரெட்டி படத்தின் கேரக்டரைப் போலவே ரியல் லைஃப்பிலும் அடிக்கடி டேட்டிங், நடிகையுடன் ரொமான்ஸ் என சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் எப்போது யாரை காதலிக்கிறார் என அவருக்கு மட்டுமே தெரியும், அவருக்கும் ராஷ்மிகாவுக்கும் காதல் என்பது வதந்தியாக தான் இருக்கும் என ரசிகர்களும தங்களுக்கு தாங்களே ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X