அந்த விஜய்யுடன் சேர்த்து மீம்ஸ் போட்ட நெட்டிசன்.. பொட்டில் அடித்தது போல் பதிலடி கொடுத்த நடிகை!

தன் குடும்பத்தை பற்றியோ, தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியோ பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை என தன்னை கேலி செய்த நெட்டிசனுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சென்னை: தன்னை கேலி செய்த நெட்டிசன்களுக்கு நடிகை ராஷ்மிகா சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

சமூக வலைதளங்கள் பல நேரம் வரமாகவும், சில நேரம் சாபமாகவும் அமைந்துவிடுகிறது. தன்னுடைய அடையாளங்களை மறைத்துக்கொண்டு, சில நெட்டிசன்கள் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல.

Rashmika Mandanna hits back at trollers

பல நடிகர், நடிகையர் அதுபோன்ற சமூக வலைதள அரக்கர்களுக்கு இரையாகிவிடுகின்றனர். பலர் அமைதியாகிவிடும் நிலையில், சிலர் மட்டும் தான் எதிர்த்து குரல் கொடுக்கின்றனர். அப்படி தன்னை கேவலமாக சித்தரித்து டிரோல் செய்த நெட்டிசனுக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

கீதாகோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்ததால், ராஷ்மிகாவை அவருடன் இணைத்து டோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். இதை வைத்து ஒரு நெட்டிசன், ராஷ்மிகாவை கேவலமாக சித்தரித்து மீம்ஸ் போட்டார்.

அந்த மீம்ஸ் பார்த்து கோபமடைந்த ராஷ்மிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " நடிகர்களை இப்படி அசிங்கப்படுத்துவதால் உங்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது என எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு எளிய இரை நாங்கள் தான். சினிமா நடிகை என்பதற்காக எங்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம் என அர்த்தமாகிவிடாது.

Rashmika Mandanna hits back at trollers

மோசமான பதிவுகளை புறந்தள்ளிவிடுங்கள். அதற்கு முக்கியத்துவம் தராதீர்கள் என நீங்கள் கூறுகிறீர்கள். அதை நானும் செய்கிறேன். என்னுடைய வேலையை பற்றி எது வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் என் குடும்பத்தை பற்றியோ, தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியோ பேசுவதற்கு உங்கள் யாருக்கும் உரிமை இல்லை.

எந்த நடிகரையும் இது போல் பேசக்கூடாது. ஏனென்றால் ஒரு நடிகராக இருப்பது அத்தனை சுலபம் இல்லை. ஒவ்வொரு வேலைக்கும் நாம் உச்சபட்ச மரியாதை தர வேண்டும். முதலில் நாம் ஒருவரை ஒருவர் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்", என காட்டமாக ராஷ்மிகா பதிவிட்டுள்ளார்.

ராஷ்மிகாவின் இந்த பதிவு வைரலாகியுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் இன்று ஒருவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைவித்துவிட்டால் எந்த எல்லைக்கும் போகின்றனர். இதற்கு ஒரு கட்டுபாடு வரவேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு. அதேசமயம் ஊர்வாயை மூட முடியாது எனும் பழமொழியையும் இங்கே கோடிட்டுக்காட்ட விரும்புகிறோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X