இதுக்குப் பேருதான் அதிர்ஷ்டம் அதுக்குள்ள 2 வது பாலிவுட் படம்.. அமிதாப்புடன் நடிக்கும் இளம் ஹீரோயின்!

By

சென்னை: பாலிவுட் படத்தில் அறிமுகமாக இருக்கும் பிரபல இளம் ஹீரோயின், அதற்குள் மற்றொரு இந்தி படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் இருந்து தெலுங்குக்கு சென்ற அவர், அங்கு டாப் ஹீரோயினாக இருக்கிறார்.

விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதகோவிந்தம் கவனிக்கப்பட்டதை அடுத்து அதிக படங்களில் நடித்து வருகிறார்.

பெரிய ஹீரோ

பெரிய ஹீரோ

தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவான மகேஷ்பாபு ஜோடியாக, சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி, சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

ஆடலூ மீக்கு ஜோகார்லு

ஆடலூ மீக்கு ஜோகார்லு

இப்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இதை சுகுமார் இயக்குகிறார். செம்மரக் கடத்தல் தொடர்பான கதையை கொண்ட இந்தப் படத்தில் சித்தூர் பகுதி பெண்ணாக, நடிக்கிறார், ராஷ்மிகா. இதற்கிடையே தெலுங்கு ஹீரோ சர்வானந்த் நடிக்கும் ஆடலூ மீக்கு ஜோகார்லு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

நேஷனல் க்ரஷ்

நேஷனல் க்ரஷ்

இதையடுத்து மேலும் 2 தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்துவிட்டது. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் அதன் ரிலீஸ் தள்ளிப் போகிறது.

நேஷனல் க்ரஷ்

நேஷனல் க்ரஷ்

இதற்கிடையே அவர் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 2020 ஆம் வருடத்தின் நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்ற பெருமையை அவர் பெற்றிருந்தார். இதற்காக அவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பாராட்டித் தள்ளினர்.

சித்தார்த் மல்ஹோத்ரா

சித்தார்த் மல்ஹோத்ரா

இதற்கிடையே, ராஷ்மிகா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாயின. அதன்படி மிஷன் மஞ்சு என்ற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக நடிக்கிறார். ஷாந்தனு பாஹி இயக்கும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

Recommended Video

Google declares Rashmika Mandanna as the National Crush of India 2020 | Filmibeat Tamil
தற்காலிக டைட்டில்

தற்காலிக டைட்டில்

இந்நிலையில் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். விகாஷ் பால் இயக்கும் இந்தப் படத்தில் அவர் அமிதாப் பச்சனுடன் நடிக்கிறார். அப்பா - மகள் பற்றிய கதையான இதில் நீனா குப்தா உட்பட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு டெட்லி என்ற தற்காலிக டைட்டில் வைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X