அழகான ராஷ்மிகா... மேலும் ஒரு சிறப்பு... அதிகம் விரும்பக்கூடிய பெண் 2020 விருது
சென்னை : தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
Recommended Video
தற்போது பாலிவுட்டில் தன்னுடைய இரண்டாவது படத்தில் அமிதாப் பச்சனுடன் நடித்து வருகிறார்.
தற்போது இவரது சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும்வகையில் பெங்களூர் டைம்ஸ் விருதை அறிவித்துள்ளது.

சிறப்பான சுல்தான் படம்
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிகர் கார்த்தியுடன் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சுல்தான் இவருக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது. இதேபோல இந்தியில் இரண்டாவது படமாக நடிகர் அமிதாப் பச்சனுடன் குட்பை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

முன்னணி ஹீரோக்களுடன் படங்கள்
தெலுங்கிலும் கீதா கோவிந்தம் படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் இவர் நடித்து வருகிறார். கடந்த 2014ல் டைம்ஸ் ப்ரெஷ் பேஸ் தேசிய விருதை இவர் பெற்றுள்ளார். இதன்மூலம் திரைத்துறையில் இவர் காலடி எடுத்துவைத்து தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

அதிகம் விரும்பும் பெண் 2020
இந்நிலையில் தற்போது பெங்களூரு டைம்சின் அதிக விரும்பக்கூடிய பெண் 2020 என்ற சிறப்பை பெற்றுள்ளார். இந்நிலையில் தான் சிறப்பான ப்ரெஷ் பேஸ் என்ற பெருமையை பெற்றது தன்னுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய தருணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டரில் பாசிட்டிவ் கருத்துக்கள்
மேலும் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் சிறப்பாக செயல்பட்டுவரும் ராஷ்மிகா, சிறப்பான மனநலத்தை கையாளும் வித்தைகளை வெளிப்படுத்தி வருகிறார். நம்பிக்கை, மகிழ்ச்சி உள்ளிட்டவற்றை அனைவருக்கும் கடத்தி வருகிறார். மேலும் பாதுகாப்பின்மை குறித்து அவர் பல்வேறு கருத்துக்களை ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











