சிறப்பான விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணி.. ஹீராயினாக களமிறங்கும் வாரிசு நடிகை.. அட்ராசக்க!
சென்னை : நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அடுத்ததாக அவரது கோப்ரா படம் ரிலீசாக உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாக உள்ளது.
இதனிடையே பா ரஞ்சித்துடன் விக்ரம் இணையும் சியான் 61 படத்திற்கான பூஜைகள் சமீபத்தில் போடப்பட்டது.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகிறார். அவரது கேரியர் இளம் வயதிலேயே துவங்கினாலும் தனக்கான இடத்தை பிடிக்க அவர் போராட வேண்டியிருந்தது. டப்பிங் உள்ளிட்ட பல விஷயங்களை அவர் இடைப்பட்ட காலத்தில் செய்தார்.

கைத்தூக்கிவிட்ட சேது படம்
தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் அவர் நடித்த சேது படம் அவரை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியது. அந்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து முன்னேறினார். அவரது முன்னேற்றம் மற்றவர்கள் அதிசயிக்கும் வகையில் தொடர்ந்து வருகிறது. தயாரிப்பாளர்களின் பேவரைட் நடிகராக தொடர்ந்து இருக்கிறார்.

மகான் படம்
இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடிடியில் வெளியானது மகான். கேங்ஸ்டர் மற்றும் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது. சில சமூக விஷயங்களை இந்தப் படம் கேள்விக்குட்படுத்தியது. ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பையும் பெற்றது.

கோப்ரா படம் ரிலீஸ்
தொடர்ந்து இவரது நடிப்பில் கோப்ரா படம் அடுத்த மாதத்தில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் இசை சமீபத்தில் பிரம்மாண்டமான அளவில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படமும் செப்டம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

பா ரஞ்சித்துடன் கூட்டணி
இந்நிலையில் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். 19வது நூற்றாண்டை மையப்படுத்திய உண்மைக்கதைகளின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட்டில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3டியில் உருவாகும் சியான்61 படம்
ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு சிறப்பான அளவில் போடப்பட்டது. அதிகமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ள இந்தப் படம் கேஜிஎப் கதையை மையப்படுத்தி உருவாக உள்ளதாகவும் 3டியில் உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ராஷ்மிகா நாயகி?
படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ள நிலையில், தற்போது ஹீரோயின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. புஷ்பா மற்றும் வாரிசு படங்களை தொடர்ந்து இந்தப் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்
புஷ்பா படத்தில் தன்னுடைய கெட்டப்பை மாற்றி நடித்து சிறப்பான கமெண்ட்ஸ்களை பெற்றவர் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தை தொடர்ந்து இவருக்கு விஜய்யுடன் வாரிசு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து தற்போது சியானுடன் இவர் ஜோடி சேரவுள்ளதாக கூறப்படும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











