வாழ்ந்து என்ன பயன்.. இதெல்லாம் தேவைதான்.. ராஷ்மிகா மந்தனா இப்படி ஓபனா பேசிட்டாங்களே

சென்னை: நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா கடைசியாக புஷ்பா 2 படத்தில் நடித்தார். அந்தப் படம் இதுவரை 1500 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பிஸியாகியிருக்கும் ராஷ்மிகா சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். இதற்கிடையே அவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்துவருவதாக கூறப்படும் சூழலில்; ராஷ்மிகா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.

கன்னட திரையுலகில் நடிகையாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகில் குறுகிய காலத்திலேயே ஃபேமஸ் ஆனார். அதனையடுத்து தமிழில் சுல்தான், வாரிசு ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. தற்போது தனுஷுடன் குபேரா படத்தில் நடித்துவருகிறார் அவர். இந்தப் படமாவது தனக்கு தமிழில் நிரந்தரமான இடத்தை பெற்றுத் தரும் என்று உச்சக்கட்ட நம்பிக்கையோடு காத்திருக்கிறார் அவர்.

rashmika mandanna vijay devarakonda pushpa 2

புஷ்பா 2: ராஷ்மிகாவின் நடிப்பில் கடைசியாக புஷ்பா 2 படம் வெளியானது. அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்த அந்த படம் உலகளவில் இதுவரை 1500 கோடி ரூபாய்வரை வசூலித்தது. ராஷ்மிகாவுக்கும் இந்தப் படத்தில் நல்ல ஸ்பேஸ் இருந்தது. மேலும் அல்லு அர்ஜுனுடன் கொஞ்சம் ஓவராக நெருக்கம் காட்டி நடித்திருந்தார். புஷ்பா 2வுக்கு பிறகு ஹிந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கும் ஒரு படத்திலும் ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தேவரகொண்டாவுடன் காதல்: இதற்கிடையே ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்துவருவதாக கூறப்படுகிறது. புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தபோதுகூட, தான் யாரை காதலிக்கிறேன் என்று உங்களுக்குத்தான் தெரியுமே என்று பூடகம் வைத்து பேசினார் ராஷ்மிகா. மேலும் புஷ்பா 2 படத்தை அவர் விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்துடன் சேர்ந்து பார்த்ததாகவும் ஒரு தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது.

ராஷ்மிகாவின் பேட்டி: இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், "ஒரு உறவில் எனது முதல் முன்னுரிமை என்னவென்றால் அது மரியாதைதான். ஒருவரையொருவர் மதிக்கும்போதுதான் அவர்களிடையே பிணைப்பு அதிகமாகி வலுவாக இருக்கும். அதேபோ உங்கள் பார்ட்னரிடம் நேர்மையாகவும், கவனத்துடனும் இருக்க வேண்டும். இந்த குணங்களை கொண்ட ஒருவருடன் மட்டும்தான் நான் இருக்க ஆசைப்படுகிறேன். இவை எதுவுமே இல்லையென்றால் அந்த நபருடன் என்னால் பழக முடியாது.

வாழ்ந்து என்ன பயன்?: நான் காதல் செய்யவே விரும்புகிறேன். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு துணை தேவை. நம்முடன் யாருமே இல்லை என்றால் இந்த வாழ்க்கையை வாழ்வதில் என்ன பயன் இருக்கப்போகிறது. உங்களின் ஏற்றங்கள், தாழ்வுகளை காண்பதற்கும், உங்கள் அருகில் இருந்து வாழ்க்கையை கொண்டாடுவதற்கும் ஒருவர் நிச்சயம் தேவை. ஒரு உறவில் அன்பு, பச்சாதாபம், அக்கறை, உண்மை இருப்பது அவசியம். இதுதான் உறவுகளை வளர்ப்பதற்கு தேவையான பண்புகள். ஏனென்றால் இது என்னிடம் இயல்பாகவே இருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X