அந்தக் காட்சியில் நடிக்கும்போது கண்ணாடி வளையல் உடஞ்சுடுச்சு.. ஆனாலும் அல்லு அர்ஜுன் விடல - ராஷ்மிகா

சென்னை: புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் பெரும் வேட்டை நடத்தி வருகின்றது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, புஷ்பா 2 படத்தினைக் காண வந்த ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியாகியுள்ளார். இப்படியான நிலையில் புஷ்பா 2 படத்தில் நடித்தது குறித்து ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ள தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புஷ்பா 2, கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் அடுத்த பாகம். புஷ்பா 2 படம், முதல் பாகத்தை விடவும் அதிக அளவில் பொருட் செலவு செய்யப்பட்டு, உருவாக்கப்பட்டது. படத்தில் நடித்த அல்லு அர்ஜுனுக்கு மட்டுமே சம்பளம் ரூபாய் 300 கோடிகள் என தகவல்கள் வெளியானது. படத்திற்கு பின்னணி இசை தமன் மற்றும் சாம் சி.எஸ்., அமைத்தனர். பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்தார்.

rashmika mandanna allu arjun pushpa 2 2

படம் கடந்த 5ஆம் தேதி ரிலீஸ் ஆகி இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை குவித்தது. படம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வசூல் குவித்தது. இதுவரை படம் ரூபாய் 1700 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் படம் ரிலீஸ் ஆன முதல் நாள் இரவு, அதாவது டிசம்பர் 4ஆம் தேதி இரவு, ரசிகர்களுக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சிறப்புக் காட்சியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள், கூடினார்கள். அந்த நேரத்தில் படத்தினை ரசிகர்களுடன் பார்க்க, எந்த முன் அறிவிப்பும் இன்றி, அல்லு அர்ஜுன் வந்துள்ளார். இதனால், அவரை அருகில் பார்க்க ரசிகர்களுக்குள் ஏற்பட்ட தள்ளு முள்ளு காரணமாக ரேவதி என்ற ரசிகை நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நிதி உதவி: அவரது மகனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டு கோமாவுக்குச் சென்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர், சில தினங்களுக்கு முன் நினைவு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் இடைக்கால ஜாமீன் வாங்கி வெளியேறினார். அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் இணைந்து, உயிரிழந்த ரேவதியின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 கோடி நிதி உதவி செய்தனர். மேலும் நடந்த அசம்பாவிதத்திற்கு வருத்தமும் தெரிவித்தனர்.

rashmika mandanna allu arjun pushpa 2 2

ராஷ்மிகா: இப்படியான நிலையில் புஷ்பா 2 படத்தில் நடித்தது தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, புஷ்பா 2 படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்ட பாடல் ஃபீலிங்ஸ் பாடல்தான். இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் இப்போதும் ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு வருகின்றனர். இந்தப் பாடல் தொடர்பாக ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

rashmika mandanna allu arjun pushpa 2 2

கண்ணாடி வளையல்: அதாவது, "ஃபீலிங்ஸ் பாடல் 4 முதல் 5 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பாடலுக்காக மிகவும் கடுமையான ரிகர்சல்கள் நடைபெற்றது. ஒரு முறை பாடலில் ஆடும்போது அல்லு அர்ஜுன் சாரின் கை பட்டு எனது கையில் இருந்த கண்ணாடி வளையல்கள் உடைந்துவிட்டது. அதனால் எனது கையில் ரத்தமும் வந்தது. நான் சார் சார் எனக் கத்தினேன். ஆனால் அல்லு அர்ஜுன் சார் தொடர்ந்து வெறித்தனமாக ஆடிக்கொண்டே இருந்தார்"என நகைச்சுவையாக கூறினார். ராஷ்மிகாவின் இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

rashmika mandanna allu arjun pushpa 2 2

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X