ராஷ்மிகாவுக்கு ரசகுல்லா.. ஷாருக்கானுக்கு குலோப் ஜாமுன்.. வாரிசு ஹீரோயினுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு!

சென்னை: Rashmika Mandanna and Shah Rukh Khan - நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நயன்தாராவை தொடர்ந்து தட்டித்தூக்கி உள்ளார் வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனா.

தென்னிந்திய சினிமாக்களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகைகள் தற்போது பாலிவுட்டில் அதிரடி என்ட்ரி கொடுத்து வருகின்றனர்.

Rashmika Mandanna pairs with Shah Rukh Khan for an advertisement video trending

நயன்தாராவை தொடர்ந்து: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூல் எட்டியுள்ள நிலையில் அந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அறிமுகமானார்.

இந்நிலையில் தற்போது ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் கிடைத்துள்ளது.

தென்னிந்தியாவில் டாப்: விஜய் தேவரகொண்டாவின் கீதகோவிந்தம் திரைப்படம் நடிகை ராஷ்மிகா மந்தனா மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை நாடு முழுவதும் உருவாக்கியது. நேஷனல் க்ரஷ் என ரசிகர்கள் கொண்டாடி வரும் ராஷ்மிகா தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்ட ராஷ்மிகா தமிழில் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த ஆண்டு வெளியான தளபதி விஜயின் வாரிசு படத்தில் கியூட்டான ரோலில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை தனது வசீகர நடனத்தால் கவர்ந்தார்.

அனிமல் ஹீரோயின்: தென்னிந்தியாவில் டாப் நடிகையாக மாறிய ராஷ்மிகா தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ராஷ்மிகா மந்தனா லுக் நேற்று வெளியானது. இந்நிலையில், அடுத்து ஷாருக்கானுடன் இணைந்து அவர் நடித்துள்ள விளம்பர படம் தற்போது வெளியாகியுள்ளது.

ஷாருக்கானுடன் ஜோடியாக: ராஷ்மிகா மந்தனா ரசகுல்லாவை எடுத்துக்கொண்டு, ஷாருக்கானுக்கு குலோப் ஜாமுன் கொடுக்கும் புதிய விளம்பர வீடியோவில் பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷா உடன் இணைந்து நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

புஷ்பா 2 ஹீரோயின் இந்தப் புதிய விளம்பர வீடியோ ஒட்டுமொத்த ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கூடிய சீக்கிரமே ஷாருக்கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா புதிய படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ரன்வீர் சிங்குடன் விளம்பரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X