ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் குளு குளு கிளாமர் போட்டோக்கள் - குஷியில் ரசிகர்கள்
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தானா சமூக வலைதளபக்கத்தில் அவரது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த ஃபோட்டோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகை ராஷ்மிகா மந்தானா கிரீக் பார்ட்டி என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனார். பின்பு அவர் நடித்த திரைப்படம் எதிர் பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

அதன் பிறகு கீதாகோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரைத்துறையில் பிரபலம் ஆனார். இந்தப் படத்திற்கு பின்பு தான் தெலுங்கு பட ரசிகர்களும் கோலிவுட் ரசிகர்களும் ராஷ்மிகா ராஷ்மிகா என்று பைத்தியம் பிடிக்காத குறையாக திரிகின்றனர்.
அவர் சமீபத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டவுடன் ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் டியர் காம்ரேட் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகியது.
தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் சுல்தான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர்.
இந்தத் திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இப்படம் இவருக்கு இரண்டாவது படமாகும். இவர் ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ இயக்கியிருந்தார். மேலும், இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் மற்றும் மெர்வின் இசையில், ஆன்டனி ரூபெனின் படத்தொகுப்பில் விரைவில் வரவிருக்கிறது.
நடிகை ராஷ்மிகா அவ்வப்போது தன்னை கவர்ச்சியாக ஃபோட்டோக்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி திக்குமுக்காட வைக்கிறார். அதே போல் தான் நடிக்கும் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த ஃபோட்டோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுல்தான் படத்தில் நடிக்கும்போது எடுத்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இப்படம் சம்பந்தமான காட்சிகள் எதுவும் வெளிவராத நிலையில் ராஷ்மிகா சுல்தான் படம் தொடர்பான ஃபோட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால், ராஷ்மிகா உடனடியாக அந்த ஃபோட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











