ப்பா.. அத்தனை முறை லிப் லாக் சீன்.. அனிமல் படத்துக்கு ராஷ்மிகா எத்தனை கோடி வாங்குனாரு தெரியுமா?

மும்பை: பாலிவுட்டில் பிஸியாகி வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா அனிமல் படத்திற்கு பல கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தில் கடந்த 2016-ல் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் அஞ்சனை புத்ரா, சமக் படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் சலோ எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். 2018ல் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீத கோவிந்தம் படத்தில் நடித்ததன் பிறகு இந்தியா முழுவதும் அறியப்படும் நேஷனல் கிரஷ் ஆக மாறினார்.

Rashmika Mandanna receives a huge amount as salary for Animal movie

அனிமல் படத்துக்கு வெயிட்டிங்: கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டில் அமிதாபச்சன். ரன்பீர் கபூர் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா தீபாவளி கொண்டாட்டமாக உருவாக உள்ள அனிமல் படத்தில் நடித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி இயக்குநர்: அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்க இயக்கத்தில் ரன்பிர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. சமீபத்தில், ரன்பிர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த ரொமான்டிக் பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

அதற்கு முக்கிய காரணமே அந்த பாடலின் தொடக்கத்தில் இருந்து பல இடங்களில் ராஷ்மிகா மந்தனா ரன்பீர் கபூர் சும்மா லிப் லாக் கிஸ்ஸை மானாவாரியாக அடித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா பாலிவுட் படத்தில் தாராளம் காட்டி நடித்துள்ள நிலையில் அவரது சம்பளம் குறித்த விபரங்கள் தற்போது கசிந்துள்ளன.

Rashmika Mandanna receives a huge amount as salary for Animal movie

ராஷ்மிகா சம்பளம்: வாரிசு படத்திற்கு சுமார் மூன்று கோடி ரூபாய் சம்பளமாக வாங்கிய ராஷ்மிகா மந்தனா தற்போது அனிமல் படத்திற்காக அதிகபட்சமாக 4 கோடி ரூபாயை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ரன்பிர் கபூருக்கு 70 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அப்பாவாக நடித்துள்ள அனில் கபூருக்கு 2 கோடி ரூபாய் சம்பளமும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சன்னி தியோலுக்கு 4 கோடி ரூபாய் சம்பளமும் வழங்கப்பட்டிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X