Rashmika Mandanna: விஜய் தேவரகொண்டாவுடன் டேட்டிங்கா.. மவுனம் கலைத்த ராஷ்மிகா!
நடிகை ராஷ்மிகா மந்தனா : நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இந்திய அளவில் நேஷனல் க்ரஷ்ஷாக மாறியுள்ளார். இவரது அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாகி இந்திய அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது. அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த புஷ்பா படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. தமிழிலும் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் படத்தில் நடித்திருந்த ராஷ்மிகா, தொடர்ந்து விஜய்யுடனும் ஜோடி சேர்ந்திருந்தார்.
நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல்மழை பொழிந்தது. 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக கூறப்பட்டுள்ளது. காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன் என இந்தப் படத்தில் கலவையான நடிப்பை நடிகர் விஜய் வெளிப்படுத்தியிருந்தார். பாடல் காட்சிகளிலும் விஜய்க்கு இணையான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களை ராஷ்மிகா கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தெலுங்கின் சூப்பர்ஹிட் ஹீரோ விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா டேட்டிங்கில் உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர்கள் இருவரும் முன்னதாக கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற வெற்றிப் படங்களில் இணைந்திருந்த நிலையில், இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெளிநாட்டில் இருவரும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இதனிடையே விஜய் தேவரகொண்டாவிற்கு பிடித்தமான மோதிரத்தை ராஷ்மிகா அணிந்துள்ளதாகவும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் ஒரே அறையில் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. விரைவில் இவர்கள் குறித்த சிறப்பான செய்தியை எதிர்பார்க்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த விஷயத்தில் ராஷ்மிகா தனது மவுனத்தை கலைத்துள்ளார்.

இந்த ட்வீட்டிற்கு பதில் ட்வீட் செய்துள்ள ராஷ்மிகா மந்தனா, ஐயோ ரொம்ப யோசிக்காதீங்க என்று ரிப்ளை செய்துள்ளார். விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா டேட்டிங்கில் உள்ளதாக தொடர்ந்து கூறப்பட்ட நிலையில், இருவரும் இந்த விஷயத்தை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை. இந்நிலையில், இந்த விஷயத்தில் தற்போது ராஷ்மிக பதிலளித்துள்ளார். இதன் மூலம் தற்போது இந்த விஷயத்தில் ரசிகர்களுக்கு தெளிவு கிடைத்துள்ளது-


Click it and Unblock the Notifications











