ராஷ்மிகா மந்தனாவுக்கு அடித்தது ஜாக்பாட்.. பாலிவுட் படத்தில் இந்த பிரபல நடிகருக்கு ஹீரோயினாகிறார்!

மும்பை: தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனாவுக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்துள்ளது.

விளம்பர படங்களை இயக்கி வந்த பிரபல இயக்குநர் சாந்தனு பக்சி இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிகை ராஷ்மிகாவு பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

1970ல் பாகிஸ்தானின் இதய பகுதியில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலை மையமாக கொண்டு இந்த படம் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேஷ்னல் கிரஷ்

நேஷ்னல் கிரஷ்

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தானா சமீபத்தில் நேஷ்னல் கிரஷ்ஷாக தேர்வானார். இந்நிலையில், ராஷ்மிகாவுக்கு பெரிய பட்ஜெட் பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ராஷ்மிகாவுக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்த நிலையில், அவரது ரசிகர்கள் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடினர்.

மகேஷ் பாபுவுக்கு ஜோடி

மகேஷ் பாபுவுக்கு ஜோடி

இந்த ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் ராஷ்மிகா நடித்த போகரு படத்தின் காட்சிகளும் இணைய தளத்தில் வைரலாகிய நிலையில், தற்போது பாலிவுட் வாய்ப்பும் கிடைத்துள்ளதால் ராஷ்மிகா ரொம்பவே ஹேப்பி!

மிஷன் மஜ்னு

மிஷன் மஜ்னு

பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள மிஷன் மஜ்னு படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார். விளம்பர படங்களை இயக்கி பிரபலமான சாந்தனு பக்‌சி இந்த படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். 1970களில் இந்திய ராணுவத்தால் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல் தான் இந்த படத்தின் கதை.

சுல்தானுக்கு வெயிட்டிங்

சுல்தானுக்கு வெயிட்டிங்

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் படத்தில் ஜோடியாக ராஷ்மிகா நடித்து தமிழில் அறிமுகம் ஆகவுள்ளார். சுல்தான் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X