பொத்துனு காலில் விழுந்த மாப்பிள்ளை.. அட்சதை தூவி வாழ்த்திய ராஷ்மிகா மந்தனா!
சென்னை: திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகாவின் காலில் திடீரென மணமக்கள் விழுந்ததால் அவர் ஒரு நொடி பதறிப்போனார்.
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் கிர்க் பார்ட்டி என்ற படத்தின்மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். காந்தாரா படப்புகழ் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ராஷ்மிகாவிற்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.

ராஷ்மிகா மந்தனா: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கீதா கோவிந்தம் படம் இவரை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியது. இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். ராஷ்மிகாவை இந்திய அளவில் சிறப்பான நாயகியாக இந்தப் படம் வெளிக்காட்டியது. தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா நடித்து வெளியான புஷ்பா படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று ராஷ்மிகாவிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
படுபிஸியான நடிகை: தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார் ராஷ்மிகா. தொடர்ந்து கடந்த மாதத்தில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாகியிருந்தார். இந்தப் படங்கள் தமிழிலும் ராஷ்மிகாவிற்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.
பான் இந்திய ஸ்டார்: இந்தப் படங்களின் வெற்றி இவரை இந்திய அளவில் பான் இந்தியா நாயகியாக மாற்றியுள்ளது. அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் கமிட்டாகி நடித்து வருகிறார் ராஷ்மிகா. தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பொத்துனு விழுந்த மாப்பிள்ளை: இந்நிலையில், தனது உதவியாளர் சாய் பாபுவின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது அவர் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினார். அப்போது, ஓவராக மகிழ்ச்சி அடைந்த மாப்பிள்ளை பொத்துனு ராஷ்மிகாவின் காலில் விழுந்தார். மாப்பிள்ளை விழுந்ததால்,வேறு வழியில்லாமல் மணப்பெண்ணும் அவரது காலில் விழுந்தார்.
இதை சற்றும் எதிர்பாராத ராஷ்மிகா என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்தார். அட்சதை தூவி நல்லா இருங்க என்று மனதார வாழ்த்தினார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











