Rashmika Mandanna: என் உடலை விட்டே உயிர் போயிடுச்சு.. ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ஷாக் போஸ்ட்!
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா என் உடலை விட்டே உயிர் போயிடுச்சு என பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
பெங்களூரு பெண்ணான ராஷ்மிகா மந்தனா நேஷனல் கிரஷ் என கொண்டாடப்படுவதை போலவே தற்போது பான் இந்தியா நடிகையாக மாறிவிட்டார். கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா விஜய்யின் வாரிசு படத்துக்கு பிறகு பாலிவுட்டில் பிசியான நடிகையாக மாறியுள்ளார்.

அமிதாப் பச்சனின் குட் பை படத்தின் மூலம் அங்கே அறிமுகமானவர் தற்போது ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் அனிமல் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி விஜய் தேவரகொண்டாவுக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குநர் சந்தீப் வாங்க ரெட்டி தான் அந்த படத்தை வெறித்தனமாக இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
4 கோடி ரசிகர்கள்: தென்னிந்தியாவில் மற்ற எந்தவொரு நடிகைக்கும் இல்லாத அளவுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு அதிகபட்சமாக 4 கோடி ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இதுவரை சுமார் 39 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டு நிஜமாவே நேஷனல் கிரஷ்ஷாக ஜொலித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
புஷ்பா 2வுக்கு வெயிட்டிங்: ஒரு பக்கம் அனிமல் படத்தில் பிசியாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு இரண்டு படங்களும் வெளியானால், ராஷ்மிகா மந்தனாவின் ரேஞ்சே மாறிடும் என்கின்றனர்.
புஷ்பா முதல் பாகத்திலேயே ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் செம ராவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷிப்படுத்தியிருந்தார் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில், ரெண்டாவது பார்ட்டிலும் சாமி சாமி பாடல் போல கண்களுக்கு குளிர்ச்சியாக ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.
விஜய் தேவரகொண்டாவுடன் கிசுகிசு: நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக ஏகப்பட்ட ஸ்ட்ராங்கான கிசுகிசுக்கள் வலம் வருகின்றன.
சமீபத்தில், இருவரும் ஒரே வீட்டில் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், அதனை ரசிகர்கள் மேட்ச் செய்து ரகசியமாக லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என்றே செய்திகள் வெளியானது.
உடலை விட்டு உயிர் போயிட்டு வந்துச்சு: இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடுமையான வொர்க்கவுட் ஒன்றை செய்யும் வீடியோவை ஷேர் செய்துள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, "This is a video @junaid.shaikh88 has captured- where my soul is leaving my body and coming back.." என கேப்ஷன் போட்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











