twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்பா.. அப்பா பற்றி என்ன சொல்ல.. ரொம்ப பேசிக்க மாட்டோம்.. ஆனால்.. மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா!

    |

    பெங்களூரு: அன்னையர் தினத்தை கொண்டாடும் அளவுக்கு பலரும் தந்தையர் தினத்தை கொண்டாடுவதில்லை.

    தந்தையர் தினம் எப்போது என்றே, நம்மில் பலருக்கும் தெரியாமலும் இருக்கலாம். வரும் ஜூன் 21ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில், கீத கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது தந்தை குறித்த உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    சுல்தான் ஜோடி

    சுல்தான் ஜோடி

    கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் கலக்கி வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகவுள்ளார். சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் அந்த படம் உருவாகி வருகிறது.

    டாப் ஹீரோயின்

    டாப் ஹீரோயின்

    கன்னட படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இன்கேம் இன்கேம் காவாலே பாடல் மற்றும் ராஷ்மிகாவின் அசத்தல் நடிப்பு, அந்த படத்தை 100 கோடி கிளப்பில் கொண்டு சென்று, ராஷ்மிகாவை டோலிவுட்டில் டாப் ஹீரோயினாக மாற்றியது.

    சூப்பர்ஸ்டார் படம்

    சூப்பர்ஸ்டார் படம்

    கீத கோவிந்தம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி, ராஷ்மிகாவுக்கு அடுத்ததாக தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை உருவாக்கியது. இந்த ஆண்டு வெளியான அந்த படம் 200 கோடிக்கும் மேல் வசூலை வாரிக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    தந்தையர் தினம்

    தந்தையர் தினம்

    மகளிர் தினம், அன்னையர் தினம் எல்லாம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கரு உருவாக காரணமாக இருந்து, அந்த குழந்தை வளர்ந்து ஆளாக தூணாக தாங்கி நிற்கும் அப்பாக்களை போற்றும் விதத்தில் சில ஆண்டுகளாக தந்தையர் தினமும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

    என்னுடைய தூண்

    என்னுடைய தூண்

    தந்தையர் தினத்தை முன்னிட்டு, நடிகை ராஷ்மிகா மந்தனா தனது அப்பா எம்.ஏ. மந்தனா பற்றிய நீண்ட ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை போட்டுள்ளார். அதில், தந்தையின் உணர்ச்சிகளை தான் புரிந்து கொள்ள வெகு காலம் ஆகி விட்டதாகவும், அவர் தான் என்னை இத்தனை காலம் தாங்கிய தூண் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    இப்போது உணர்கிறேன்

    இப்போது உணர்கிறேன்

    அப்பா.. அப்பா பற்றி என்ன சொல்ல, சிறு வயது முதலே அவர் தன்னுடைய பிசினஸில் பிசியாக இருந்தார். என்னுடன் அதிக நேரத்தை செலவிட வில்லை. நான் பள்ளியில் படித்தேன், ஹாஸ்டலில் வளர்ந்தேன், யூஜி, பிஜி, டிகிரிகளையும் முடித்தேன், இப்போ அப்பாவின் பிசினஸ் பார்ட்னரகவும் இருக்கிறேன். நாங்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை என்றாலும், என்னுடைய நலனில் எப்போதும் அவர் செலுத்திய அக்கறையை இப்போது தான் என்னால் உணர முடிகிறது என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

    English summary
    Rashmika post about his father, “but through it all, he has been a pillar. We don’t share too much we share just enough to know that we love each other and he knows I will always be his pillar and he will be mine.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X