Rashmika: அழைப்பிதழ் வைக்காத ராஷ்மிகா.. நக்கலாக கலாய்த்த காந்தாரா நடிகர்.. அப்படி என்ன பிரச்னை?

ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் வரும் 26ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்ப்பூர் அரண்மனையில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உதய்ப்பூர் அரண்மனையில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மொபைல் போன் கொண்டு வர அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது திருமணம் குறித்து கன்னட நடிகர் பிரமோத் ஷெட்டி தெரிவித்துள்ள கமெண்ட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது திரை வாழ்க்கையை கன்னட சினிமாவில் இருந்து தொடங்கினார். கிரிக் பார்ட்டி என்ற படத்தில் தான் இவர் அறிமுகமானார். அதன் பின்னர் தான் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தற்போது பான் இந்தியா ஸ்டாராக ஜொலிக்கிறார். தற்போது தகவல் என்னவென்றால், ராஷ்மிகா மந்தனா அறிமுகமான படமான கிரிக் பார்ட்டி படத்தில் நடித்த ரக்‌ஷித் ஷெட்டியும் ராஷ்மிகாவும் காதலித்தார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நிச்சயதார்த்தம் எல்லாம் செய்து கொண்டனர். ஆனால் திருமணம் ஏனோ நடைபெறவில்லை.

Rashmika Mandanna Snub Kirik Party Team On Wedding Invite for the Rakshit Shetty and His Squad

பிரமோத் ஷெட்டி: இப்படி இருக்கையில் கிரிக் பார்ட்டி படத்தில் நடித்த மற்றொரு நடிகரான பிரமோத் ஷெட்டி அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ராஷ்மிகா திருமணத்திற்கு உங்களுக்கு அழைப்பு வந்ததா? நீங்கள் போவீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவரோ, " ராஷ்மிகா திருமணத்திற்கு எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. வந்தால் கட்டாயம் செல்வேன். ஆனால் இதில் விஷயம் என்னவென்றால் எனக்கு அழைப்பு வராது எனக்கே நன்றாக தெரியும்" என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

ரக்‌ஷித் ஷெட்டி: அதேபோல் ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் ரக்‌ஷித் ஷெட்டி குறித்தும் பிரமோத் ஷெட்டியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரமோத் ஷெட்டியோ, " ரக்‌ஷித் ஷெட்டி ஒன்றும் சாக்லெட் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் சின்ன பையன் கிடையாது. ரக்‌ஷித் ஒரு ஃபீனிக்ஸ் பறவை போல. அவர் அந்த பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து எழுந்து வருவார் பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Rashmika Mandanna Snub Kirik Party Team On Wedding Invite for the Rakshit Shetty and His Squad

இணையவாசிகள் கேள்வி: இவரது இந்த கருத்தை கவனித்த பலரும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணத்திற்கு அவருடன் முதல் படத்தில் நடித்த ரக்‌ஷித் ஷெட்டி, பிரமோத் ஷெட்டி என இருவருக்குமே அழைப்பிதழ் செல்லவில்லை என்பதை பார்க்கும் போது ஷெட்டி கும்பலிடம் இருந்து மொத்தமாக விலகி நிற்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார் போலயே என்றும் பதிவிட்டும் வருகிறார்கள். இவரது இந்த பேட்டி தொடர்பான தகவல்கள் கர்நாடக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X