கார்த்தியுடன் மீண்டும் இணையும் ராஷ்மிகா? சோழ தேசத்தில் இருந்து ஜப்பான் செல்லும் வந்தியத்தேவன்!

சென்னை: கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன், சர்தார் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

இதனைத் தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் என்ற படத்தில் நடிக்கிறார் கார்த்தி.

ஜப்பான் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் எனக் கூறப்படும் நிலையில், இந்தப் படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

பிஸியான வந்தியத்தேவன்

பிஸியான வந்தியத்தேவன்

தமிழில் முன்னணி நடிகரான கார்த்தி, இப்போது ரொம்பவே பரபரப்பாக காணப்படுகிறார். ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது. இப்போது பொன்னியின் செல்வன் படமும் வெளியாகவுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வரும் 30ம் தேதி வெளியாகும் பொன்னியின் செல்வனில் கார்த்தி வந்தியத்தேவனாக நடித்துள்ளார். ரஜினி, கமல் என டாப் ஹீரோக்கள் நடிக்க ஆசைப்பட்ட வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக ஊர் ஊராக பறந்து வருகிறார் கார்த்தி.

தீபாவளிக்கு சர்தார்

தீபாவளிக்கு சர்தார்

விருமன், பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து அடுத்த மாதம் தீபாவளிக்கு கார்த்தியின் 'சர்தார்' திரைப்படமும் வெளியாகிறது. போலீஸ், வயதான தோற்றம் என கார்த்தி இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ளார். ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள சர்தார், கார்த்தியின் ரசிகர்களுக்கான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தியுடன் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சர்தார் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால், விரைவில் இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கார்த்தி கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.

ஜப்பான் ஷூட்டிங் அப்டேட்

ஜப்பான் ஷூட்டிங் அப்டேட்

பொன்னியின் செல்வன், சர்தார் படங்களின் ப்ரோமோஷன் முடிந்ததும், கார்த்தியின் 'ஜப்பான்' படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தியின் 24வது படமாக உருவாகவுள்ள இதனை, ராஜூ முருகன் இயக்கவுள்ளார். குக்கூ, ஜிப்ஸி படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ராஜூ முருகன், முதன்முறையாக கார்த்தியுடன் இணைகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், இப்போது அவருக்குப் பதிலாக வேறொரு முன்னணி நடிகர் கமிட் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

மீண்டும் கார்த்தியுடன் ஜோடி

மீண்டும் கார்த்தியுடன் ஜோடி

'ஜப்பான்' படத்தின் டைட்டில் உட்பட எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க ராஷ்மிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கார்த்தியின் சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, இப்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் கார்த்தியுடன் 'ஜப்பான்' படத்தில் ராஷ்மிகா மந்தனா இணையவுள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X