கரகாட்டக்காரி கனகாவின் லேட்டஸ்ட் வெர்ஷன் இவங்க தான்.. ராஷ்மிகா மந்தனா தலையில என்ன இருக்கு பாருங்க!
சென்னை: தென்னிந்திய நடிகைகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓடவிடும் அளவுக்கு 43.5 மில்லியன் ரசிகர்களை அதாவது 4 கோடி ரசிகர்களை கொண்டுள்ள ராஷ்மிகா மந்தனா பான் இந்தியா நடிகையாகவும் நேஷனல் கிரஷ்ஷாகவும் உள்ளார்.
சமீபத்தில் தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில் உள்ள குடகுக்கு தோழியின் திருமணத்திற்கு சென்ற ராஷ்மிகா மந்தனா மலைவாழ் மக்கள் எப்படி சேலை அணிவார்களோ அதேபோல் பட்டுச் சேலையை அணிந்து கொண்டு ரசிகர்களை குஷி படுத்தினார். இந்நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோ வேற லெவலில் டிரெண்டாகி வருகிறது.

பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள கல்கி படத்திலும் ராஷ்மிகா மந்தனா கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மிருணாள் தாகூர் நடித்துள்ளார் எனக் கூறப்பட்ட நிலையில், இவர் தான் நடித்திருக்கிறார் என்கின்றனர்.
நேஷ்னல் கிரஷ்: இந்திய அளவில் ஏகப்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை தங்களது கனவு கன்னியாகவே பார்த்து வருகின்றனர். கீதா கோவிந்தம் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், மகேஷ்பாபுவுடன் இணைந்து சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் நடித்தார். அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற ராஷ்மிகா இந்த ஆண்டு புஷ்பா 2 படத்திலும் ரசிகர்களை கவர காத்திருக்கிறார். தமிழில் கார்த்தியின் சுல்தான் மற்றும் விஜய்யின் வாரிசு படங்களில் நடித்த ராஷ்மிகா கடந்த ஆண்டு இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து உலக அளவில் ஃபேமஸ் ஆகிவிட்டார். அடுத்ததாக சல்மான்கானுடன் ஜோடி போட்டு சிக்கந்தர் படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக குபேரா படத்திலும் நடித்து வருகிறார்.
கரகாட்டக்காரி லேட்டஸ்ட் வெர்ஷன்: கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. அனிமல் படத்தில் பாபி தியோல் தலையில் மது பாட்டிலை வைத்துக் கொண்டு நடனமாடுவார். இந்நிலையில், நடிகர் ராஷ்மிகா மந்தனா தனது தலையில் இளநீரை வைத்துக்கொண்டு நடனமாடும் ஃபன்னான வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். ராஷ்மிகா மந்தனாவின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கரகாட்டக்காரி லேட்டஸ்ட் வெர்ஷன் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
குவியும் கமெண்ட்ஸ்: கிரஷ்மிகா என்றும் செம க்யூட் என்றும் ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். ராஷ்மிகா உங்களுக்குள்ள இவ்வளவு டேலண்ட் இருக்கா இதையெல்லாம் கொஞ்சமாவது படத்தில் காட்டினால் நல்லா இருக்குமே என நெட்டிசன்கள் கலாய்த்தும் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்குகின்றனர்.


Click it and Unblock the Notifications











