கோலிவுட் டாப் ஹீரோக்களை வளைத்துப் போடும் ராஷ்மிகா மந்தனா… அடுத்து இவருகூட தான் ஜோடியா?
சென்னை: விஜய் தேவரகொண்டாவுடன் காதல் இல்லை என சொல்லிவிட்டு அவருடன் டேட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
வெளிநாடுகளில் டூர் அடித்து வரும் ராஷ்மிகா மந்தனா விரைவில் சென்னையில் நீண்ட நாட்கள் முகாம் இட உள்ளாராம்.
விஜய்யின் வாரிசு படத்தைத் தொடர்ந்து விக்ரம், கார்த்தியுடன் ஜோடி சேரப் போகும் ராஷ்மிகா, அடுத்து ஒரு டாப் ஹீரோவுடன் நடிக்கவுள்ளார்.

டேட்டிங்கில் பிஸியான ராஷ்மிகா
கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, அவருடன் காதல் இல்லை என மறுத்து வந்தார். ஆனால், சில தினங்களுக்கு முன்னர் இருவரும் ஒன்றாக மாலத்தீவில் ரவுண்டு அடித்து வந்தனர். காதல் இல்லை என சொல்லிவிட்டு இப்படி டேட்டிங் செல்றீங்களே இது நியாயமா என ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்டு வந்தனர் ரசிகர்கள். ஆனாலும், அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத ராஷ்மிகா, அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

விக்ரம், கார்த்தியுடன் ஜோடி
தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. இந்தப் படத்தின் வெற்றியால் விஜய்யின் 'வாரிசு' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் அமிதாப்பச்சனுடன் 'குட்பை' படத்தில் நடித்தார். இந்நிலையில், கார்த்தி நடிக்கவுள்ள 'ஜப்பான்' படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'சீயான் 61' படத்திலும் ராஷ்மிகா கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்து ஒரு முன்னணி ஹீரோவுடன் ஜோடி சேர்கிறாராம் ராஷ்மிகா.

விரைவில் அறிவிப்பு
சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். தற்போது கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தனுஷ், இதனைத் தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தனுஷ் நடித்து வரும் 'வாத்தி' படமும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், முதன்முறையாக 3 மொழிகளில் உருவாகும் தனுஷின் படத்தில் ராஷ்மிகா மந்தனா அவருக்கு ஜோடியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

கோலிவுட்டில் ராஷ்மிகா புயல்
தெலுங்கில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் ராஷ்மிகா மந்தனா, கோலிவுட் பக்கமும் டாப் நடிகையாக மாற வேண்டும் என முடிவு செய்துவிட்டாராம். அதனால், முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க, சீக்ரெட்டாக ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தி வருகிறாராம். ராஷ்மிகா நடிக்கும் படங்கள் வசூலிலும் மாஸ் காட்டி வருவதால், அவரை ராசியான நடிகையாக ஹீரோக்கள் கொண்டாடி வருகின்றனர். அதனால், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனுஷுடன் ஜோடி சேரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











