ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணத்தில் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்.. கொண்டாட்டம் எப்போதிருந்து ஆரம்பிக்குது தெரியுமா?
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் வரும் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். அவர்களது திருமண பத்திரிகை நேற்று சோஷியல் மீடியாவில் லீக்கானது. சூழல் இப்படி இருக்க அவர்களது திருமணத்தில் போடப்பட்டிருக்கும் ரூல்ஸ் குறித்தும், திருமண கொண்டாட்டம் எப்போது தொடங்குகிறது என்பது குறித்தும் இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா திரைத்துறையில் அறிமுகமான புதிதில் நடிகர் ரக்ஷித் ஷெட்டியை காதலித்தார். அந்தக் காதல் நிச்சயதார்த்தம் வரை சென்றது. திருமணம் வரை செல்லவில்லை. அந்தக் காதல் முறிவுக்கு பிறகு முழுக்க முழுக்க கரியரில் கவனம் செலுத்தினார். அதன் பலனாக வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்து அவருக்கு வெற்றி மேல் வெற்றியை கொடுத்தன. முக்கியமாக புஷ்பா, புஷ்பா 2 ஆகிய படங்கள் அவரை பான் இந்தியா ஹீரோயினாக மாற்றின என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டாவுடன் காதல்: அதன் பலனாக ஹிந்தியிலும் சக்சஸ்ஃபுல் ஹீரோயினாக மாறினார். இதற்கிடையே கீதா கோவிந்தம் உள்லிட்ட படங்களில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்தபோது அவருடன் ஏற்பட்ட நாளடைவில் காதலாக மாறியது. தங்களது காதல் குறித்து அவர்கள் சீக்ரெட்டாக வைத்திருந்தாலும்; பென்டகன் ரகசியமே கசிந்துவிடும் இந்த சோஷியல் மீடியா உலகில் நீண்ட காலம் அதனை ரகசியமாக வைத்திருக்க முடியவில்லை. அவர்கள் சேர்ந்து அவுட்டிங் சென்ற புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டாகின.

உறுதியான திருமணம்: சூழல் இப்படி இருக்க அவர்கள் வரும் 26ஆம் தேதி உதய்பூரில் வைத்து திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள். அவர்களது திருமண பத்திரிகை தொடர்பான புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகின. அந்தப் பத்திரிகையில், "எங்கள் வாழ்க்கையில் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். எங்கள் குடும்பங்களின் ஆசீர்வாதங்களுடன் நானும், ராஷ்மிகாவும் 26ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம்.
புதிய அத்தியாயம்: எங்கள் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் இந்த நேரத்தில் எங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருடனும் இந்த மகிழ்ச்சியை கொண்டாடி இனிய நினைவுகளை உருவாக்க விரும்புகிறோம். உங்கள் வருகையும், ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மகிச்சியையும், அர்த்தத்தையும் கொடுக்கும்" என விஜய் தேவரகொண்டா கூறியிருக்கிறார். இந்த அழைப்பிதழானது அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
திருமணத்தில் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்: இந்நிலையில் அவர்களது திருமணம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது திருமணத்துக்கு வருபவர்கள் மொபைல் ஃபோன்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்களாம். அவர்கள் மூலம் திருமண நிகழ்வுகள் தொடர்பான வீடியோவோ, புகைப்படமோ வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக இந்த ரூலை ராஷ்மிகாவும், விஜய் தேவரகொண்டாவும் போட்டிருப்பதாக கூறுகிறார்கள். மேலும் இவர்களது திருமண கொண்டாட்டம் 24ஆம் தேதியிலிருந்தே ஆரம்பிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நோ சொன்ன விஜய் தேவரகொண்டா?: 26ஆம் தேதி திருமணத்தை முடித்துவிட்டு மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் தாஜ் நட்சத்திர ஹோட்டலில் தங்களது ரிசப்ஷனை வைக்கவிருக்கிறார்கள். அதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். முன்னதாக, இவர்களது திருமண நிகழ்வுகளை வெளியிட மிகப்பெரிய தொகைக்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ஆஃபர் தந்ததாகவும்; அதற்கு விஜய் தேவரகொண்டா நோ சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











