எங்க கல்யாணத்தை நாடே கொண்டாடனும்.. ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய விஜய் - ராஷ்மிகா மந்தனா
ஹைதாராபாத்: கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மொத்த இந்திய சினிமாவும் பேசிக் கொண்டு இருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் ஆனது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அவர்களின் இல்லற வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்று வாழ்த்தி வருகிறார்கள்.
ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் தங்களது ரசிகர்களுக்கு தங்களது திருமணம் மிகவும் மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் என்று, யோசித்து எடுத்துள்ள முடிவு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, ரசிகர்கள் பலரும் இவர்களின் இந்த முடிவை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்றே கூறலாம். அதாவது நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா தங்களது ரசிகர்களுக்கு தங்களது திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதும் உள்ள சில குறிப்பிட்ட கோவில்களில் இனிப்பு வழங்குகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் ஏற்கனவே செய்து விட்டனர்.

ரசிகர்களுக்கு ஸ்வீட்: இப்படி இருக்கையில் ஹைதராபாத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா - நடிகை ராஷ்மிகா மந்தனா தம்பதியர் ஒரு கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர். அவர்கள் இருவரும் கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகிறார்கள் என்று தெரிந்து கொண்ட ரசிகர்கள், ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் கோவில் முழுக்க திரண்டு விட்டனர்.
திருமண கொண்டாட்டம்: ரசிகர்களின் அன்பு மழைக்கு மத்தியில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது மனைவி ராஷ்மிகா மந்தனாவை மிகவும் அக்கறையாகவும் கூட்ட நெரிசலில் சிக்கி விடக்கூடாது என்று பத்திரமாகவும் அழைத்துச் சென்றார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் அவரது மனைவி ராஷ்மிகா மந்தனாவும் ரசிகர்களுக்கு தங்களது திருமண கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கினர். ரசிகர்கள் இதனை மிகவும் ஆர்வத்துடன் வாங்கினர். மேலும் பலர் அவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்க தெரிவிக்க இருவரும் தொடர்ந்து பதில் அளித்துக் கொண்டே இருந்தனர். இன்னும் சொல்லப்போனால் இருவரும் மகிழ்ச்சியில் நன்றி சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.


Click it and Unblock the Notifications











