Rashmika: ஹல்தியில் ராஷ்மிகா டீமுடன் சரியான சண்டை.. கிழிந்த விஜய் தேவரகொண்டா சட்டை.. போஸ்ட் பாருங்க

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மிகவும் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் சுமார் ஒரு வார காலத்திற்கும் மேலாக பல கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்றது. சுமார் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொடங்கிய இவர்களின் திருமணக் கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது இருவரும் பகிர்ந்து வருகிறார்கள். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், ரசிகர்கள் பலரும் இவர்களின் புகைப்படங்களைப் பார்த்து வியப்பது மட்டுமல்லாமல், அந்த புகைப்படங்களுக்கு ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் பதிவிடும் கேப்ஷன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் தங்களது ஹல்தி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். அதற்கு ராஷ்மிகா மந்தனா, " அந்த நாள் வெறும் ஹல்தியாக மட்டுமல்லாமல், வண்ணங்களில் நனைந்த ஹோலி பண்டிகை போல கொண்டாட்டமாக இருந்தது. நாங்கள் அனைவரும் வண்ணங்களில் முழுவதுமாக நிறைந்துபோல ஆகிவிட்டோம், இப்போதும் கூட என் தலைமுடியில் அந்த சிவப்பு நிறம் லேசாக ஒட்டிக்கொண்டு உள்ளது.

Rashmika Mandanna amp amp Vijay Deverakonda Share Joyful Haldi Celebration Moments Udaipur Wedding Photos Go Viral

அன்று நடந்த விளையாட்டுப் போட்டிகள் அனைத்திலும் 'டீம் பிரைட்' உதவியுடன் வெற்றி பெற்றேன். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் விஜய் தேவரகொண்டாவே அவரது அணியில் இருந்து தமக்கு உதவினார். திருமணத்தை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்த உதய்பூர் 'ITC Mementos' விடுதிக்கும், தங்களின் கற்பனைக்கு உயிர் கொடுத்து அழகான ஆடைகளை வடிவமைத்த அனாமிகா கன்னாவுக்கும் நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.

விஜய் தேவரகொண்டா: அதேபோல் விஜய் தேவரகொண்டா இந்த புகைப்படங்களுக்கு, " சங்கீத் நிகழ்ச்சி அதிகாலை வரை நடந்தாலும், மறுநாள் காலை ஹல்தி சடங்கிற்காக அனைவரின் முகத்திலும் அத்தனை உற்சாகம், குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிட வேண்டும் என்ற அந்த ஆசை, நாங்கள் மேலும் உற்சாகமாக இருக்க முக்கிய காரணம். தண்ணீர், கலர் பொடிகள், இசை என அந்த நாளே ஒரு திருவிழாவாக மாறிவிட்டது. நான் எப்போதுமே வெட்ட வெளியில் அதுவும் மண்ணில் அமர்ந்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன், அந்த கனவு உதய்பூரில் உள்ள 'மெமென்டோஸ் பை ஐடிசி' (Mementos by ITC) சொகுசு விடுதியில் நிஜமானது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் மலைகள், தோட்டங்கள் மற்றும் நதிக்கரையுடன் ஒரு சொர்க்கம் போல இருந்த அந்த இடம், எனது வாழ்வின் மிக அழகான நினைவாகிவிட்டது.

Rashmika Mandanna amp amp Vijay Deverakonda Share Joyful Haldi Celebration Moments Udaipur Wedding Photos Go Viral

போர்: ஹல்தி ஒரு 'போர்' போன்ற எண்ணத்தை எனக்கு கொடுக்க வேண்டும் என்று நான் எதிர்பார்த்தேன், அது நினைத்தபடியே நடந்தது. மதிய உணவிற்கே அனைவரது உடைகள் கிழிந்து, கலர் பொடிகள் பூசி ரகளையாக இருந்தோம். அனாமிகா கண்ணாவின் பிரத்யேக வடிவமைப்பில் நான் அணிந்திருந்த குர்தாவும் கிழிந்துவிட்டது, ஆனால் அதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்களுக்காக எதையும் இழக்கலாம். அதேபோல், எனது நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமரும் வகையில் மிகப் பெரிய 'உர்லி' (Urli) வேண்டும் என்று கேட்டேன். எனது கனவை நிறைவேற்றிக் கொடுத்த 'ஆர்.வி.ஆர் ஈவென்ட்ஸ்' (RVREventz) குழுவிற்கும், 'ஐடிசி' ஊழியர்களுக்கும் பெரிய நன்றி. "முடியாது" என்ற வார்த்தையே சொல்லாமல், நான் கேட்ட அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்துகொடுத்தனர்" என்று கேப்ஷனிட்டுள்ளார். இவர்களின் இந்த போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X