ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்: ஒரு நாளைக்கு ஹோட்டல் வாடகை மட்டும் இத்தனை கோடியா? மிரளவைக்கும் பட்ஜெட்

சென்னை: இந்தியாவில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் முதல் ஒரு கோடி திருமணங்கள் நடைபெறுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த திருமணங்களுக்காக சுமார் ரூபாய் 10 லட்சம் கோடிகள் வரை செலவு செய்யப்படுகிறது என்று Jefferies Report என்ற ஆய்வு கூறுகிறது. இந்தியா போன்ற 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இந்த பத்து லட்சம் கோடிகள் என்பது மிகவும் ஆச்சரியப்படுத்தும் தொகை தான். இதில் அதிகப்படியான செலவில் நடைபெறும் திருமணங்கள் என்றால், அது பிரபலங்கள், அரசியல்வாதிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், பணக்காரர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களின் திருமணங்கள் தான்.

அப்படி இருக்கையில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திருமணத்திற்கு மட்டும் பல கோடிகள் செலவு செய்யப்படுகிறது. பொதுவாகவே திருமணங்களில் அதிகப்படியான செலவு என்று சொன்னால் அது நகைகள் தான். அதன் பின்னர் அதிக செலவு என்றால் அது உணவு மற்றும் கேட்டரிங் என்றும் அதன் பின்னர் தான் மண்டபம் மற்றும் ஹோட்டல் செலவு என்று அந்த ஆய்வு கூறுகிறது. ஆனால் ராஷ்மிகா மந்தனாவின் திருமணத்தில் உணவு மற்றும் ஹோட்டல் என இரண்டுக்கும் சேர்த்து மட்டும் பல கோடிகள் செலவாகிறதாம்.

Rashmika Mandanna Vijay Deverakonda Wedding Luxury Udaipur Palace Celebrations Cost Crores Per Day

பிரமாண்ட செலவு: அதாவது, அவர்கள் திருமணம் உதய்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற்றாலும், இவர்கள் தங்கி இருக்கும் ஹோட்டல், ITC மொமண்ட்ஸ் ஹோட்டலில் தங்கி உள்ளனர். திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் என எல்லாம் இங்குதான் நடைபெறவுள்ளது. அவர்களின் திருமணத்திற்காக மொத்த ஹோட்டலையும் வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த ஹோட்டலில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா என இருவரது சார்பிலும் விளையாட்டுப் போட்டிகள் எல்லாம் நடைபெறுகிறது. குறிப்பாக, நீச்சல் குளத்தில் வாலி பால், கிரிக்கெட் போன்றவை எல்லாம் நடத்தப்பட்டு வருகிறது.

Rashmika Mandanna Vijay Deverakonda Wedding Luxury Udaipur Palace Celebrations Cost Crores Per Day

வாடகை: ITC மொமண்ட்ஸ் ஹோட்டலில் மொத்தம் 117 அறைகள் உள்ளன. இந்த 117 அறைகளும் ரூபாய் 20 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 70 ஆயிரம் வரை ஒரு இரவுக்கு கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம். இதில் அந்த அறைகளில் தங்குவோருக்கான உணவுகளும் அடங்கும் என்று கூறப்படுகிறது. உணவுகளில் ஏதாவது மாற்றங்களோ, கூடுதலாக ஏதாவது சேர்க்க வேண்டும் என்றாலோ அதற்காக தனியாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இப்படி இருக்கையில் ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் திருமணத்திற்காக மொத்தமாக ஒரு நாளைக்கு ரூபாய் ஒரு கோடி முதல் ரூபாய் 2.5 கோடிகள் வரை கட்டணமாக அவர்கள் செலுத்தி இருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X