ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் இன்றா?.. அதெல்லாம் இல்லை.. புது தேதி இதுதானாம்
சென்னை: ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் கடந்த சில வருடங்களாக காதலித்துவருகிறார்கள். அவர்களுக்கு கடந்த வருடத்தில் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது. சூழல் இப்படி இருக்கு உதய்பூரில் வைத்து அவர்கள் இரண்டு பேரும் இன்று திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக சோஷியல் மீடியாக்களில் நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் அவர்களது திருமணம் பற்றி புதிய தகவல் ஒன்று டோலிவுட் வட்டாரத்திலிருந்து வருகிறது.
கன்னட திரையுலகத்தில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தாலும்; ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலுங்கு திரையுலகம்தான் பெரிய வரவேற்பை கொடுத்தது. அங்கு அவர் நடித்த பல படங்கள் ஹிட்டாக; அம்மொழி திரைத்துறையில் டாப் ஹீரோயினாக மாறினார். அதனைத் தொடர்ந்து ஹிந்தியிலும் கால் பதித்து அங்கேயும் வெற்றி பெற்றார். இதன் காரணமாக பான் இந்தியா ஹீரோயினாக ஜொலிக்கும் அவரை; ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்று கொண்டாடுகிறார்கள்.
விஜய் தேவரகொண்டாவுடன் காதல்: இதற்கிடையே அவரது முதல் காதல் நிச்சயதார்த்தம் வரை சென்று பிறகு பிரேக் அப் ஆனது. ரக்ஷித் ஷெட்டியைத்தான் முதலில் காதலித்தார். அந்த காதல் முறிவுக்கு பிறகு தெலுங்கில் ஜோடி சேர்ந்து நடித்தபோது விஜய் தேவரகொண்டாவுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாக தெரிகிறது. இரண்டு பேரும் தங்களது காதலை பற்றி இதுவரை ஓபன் ஸ்டேட்மென்ட் எதுவும் கொடுக்கவில்லை என்றாலும்; மறைமுகமாக உணர்த்தி வருகிறார்கள்.

ரகசிய நிச்சயதார்த்தம்?: இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதமும் கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கடந்த வருடம் ரகசிய நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் இருதரப்புக்கும் நெருக்கமான நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள் என்றும் கூறப்பட்டது. மேலும் விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் ஓடிக்கொண்டிருந்தன.
இன்று திருமணம் என்று தகவல்?: சூழல் இப்படி இருக்க உதய்பூரில் இருக்கும் சிட்டி பேலஸில் இன்று அவர்களுக்கு கோலாகலமாக திருமணம் நடக்கவிருக்கிறது என்றும்; அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் மும்முரமாக நடந்துவருகின்றன என்றும் ரசிகை தான்யா என்பவர் நேற்று ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதன் காரணமாக ஊடகங்களின் கவனம் எல்லாம் அவர்கள் இரண்டு பேர் நோக்கியே இருந்தது.
எப்போது திருமணம்?: ஆனால் தெலுங்கு திரையுலகத்திலிருந்து புதிய தகவல்கள் வந்திருக்கின்றன. அதன்படி இன்று அவர்களுக்கு திருமணம் இல்லை என்றும்; பிப்ரவரி 26ஆம் தேதிதான் திருமணம் என்றும் சொல்லப்படுகிறது. மேலும், நேற்று வேறு ஒரு திருமணத்துக்கு நடந்த ஏற்பாட்டினை பார்த்து அது ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணத்துக்கு நடந்த ஏற்பாடு என வீடியோ எடுத்த நபர் தவறாக புரிந்துகொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. எப்படியோ விரைவில் அவர்கள் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என இரண்டு பேரின் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











