Rashmika Weds Vijay Deverakonda: நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவை மணக்கும் விஜய் தேவரகொண்டா.. அழைப்பிதழை பாருங்க
ஹைதராபாத்: நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவுக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் வரும் 26ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும், இதனை இருவருமே மறுக்கவில்லை என்பதால், திருமணம் உறுதி தான் போல என்று பேச்சுகள் அதிகமானது. இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் வரும் 26ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், மார்ச் மாதம் 6 ஆம் தேதி ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நடைபெறும் என்றும் அழைப்பிதழ் வெளியாகி உள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்துவருகிறார்கள் என்ற தகவல் கடந்த சில ஆண்டுகளாகவே திரைத்துறை உலாவி வந்த கிசுகிசு. நாங்கள் இருவரும் காதலிக்கவில்லை, இருவரும் நண்பர்கள் தான் என்று இருவரும் ஒரு கட்டம் வரை தெரிவித்து வந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் இவர்களால் அப்படியும் சொல்ல முடியவில்லை. இதனால் தொடர்ந்து மழுப்பலான பதிலையே சொல்லி வந்தார்கள். அதுவும் இந்த கேள்வியை அதிகம் எதிர் கொண்டது ராஷ்மிகா மந்தனா தான். ஆனால் எல்லா முறையும் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது புத்திசாலித்தனமனா பதிலால் அனைவரையும் சுற்றலில் விட்டார்.


Click it and Unblock the Notifications











