போடு வெடிய.. நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவுடன் ஜோடி சேர்கிறாரா சிவகார்த்திகேயன்?.. அட செம

சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது அமரன் படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் ஒரு படத்தில் இணைகிறார் சிவகார்த்திகேயன். இந்தச் சூழலில் அந்தப் படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

சிவகார்த்திகேயன் இப்போது டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களுமே 100 கோடி ரூபாயை வசூலித்து மெர்சல் செய்தது. 2K கிட்ஸ் தலைமுறையினர் அவரை ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். அதன் காரணமாக 90ஸ் கிட்ஸுக்கு எப்படி விஜய் ஒரு கொண்டாட்டத்துக்குரிய ஹீரோக்களில் ஒருவராக இருந்தாரோ அதேபோல் 2K கிட்ஸுக்கு சிவகார்த்திகேயன் திகழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் திரைத்துறையில் பெரும்பாலானவர்களின் பேச்சு.

Rashmika Mandanna Will Act With Sivakarthikeyan Here Are The Details

அமரன்: வரிசையாக இரண்டு படங்கள் மெகா ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தில் பலத்த அடி வாங்கினார். அடுத்ததாக வெளியான மாவீரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்பட்டது. முக்கியமாக சிவகார்த்திகேயனின் நடிப்பும் படத்தில் பெரிதாக பேசப்பட்டது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க; கமல் ஹாசன் படத்தை தயாரித்திருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ்: இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட்டானார் சிவா. அந்தப் படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முருகதாஸ் கடந்த சில வருடங்களாக ஒரு ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருக்கிறார். எனவே சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படத்தால் தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்கிறார் முருகதாஸ். இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சல்மான் கானை வைத்து இயக்கவிருப்பதால் சிவாவின் படத்தை விரைவில் முடிக்கும் நோக்கில் ஷூட்டிங்கை துரிதப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

சிபி சக்கரவர்த்தி: இதற்கிடையே டான் என்ற மெகா ஹிட் படத்தை சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனுக்கு கொடுத்தார். 100 கோடி ரூபாய் வசூலித்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் மிரளவிட்டது அந்தப் படம். ஆனால் அடுத்ததாக சிபி எந்தப் படத்தையும் இயக்காமல் இருக்கிறார். இதன் காரணமாக அவரது நிலைமை என்ன ஆனது என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

மீண்டும் இணையும் கூட்டணி: நிறைய ஹீரோக்களுக்கு சிபி சக்கரவர்த்தி கதை சொன்னாலும் அவர்கள் நடிக்க தயங்குகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகின. நிலைமை இப்படி இருக்க அவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனை சந்தித்து கதை கூறியதாகவும் அதற்கு சிவா ஓகே சொல்லிவிட்டார் என்றும் தெரிகிறது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X