ஏய் சாமி பாடலுக்கு இடுப்பை வளைத்து நெளித்து டான்ஸ் ஆடிய ராஷ்மிகா.. மெய்மறந்த மாணவர்கள்!

சென்னை : ஏய் சாமி பாடலுக்கு இடுப்பை வளைத்து நெளித்து டான்ஸ் ஆடிய ராஷ்மிகாவை மாணவர்கள் மெய்மறந்து பார்த்து ரசித்தனர்.

நேஷ்னல் கிரஷ் நாயகியான ராஷ்மிகா தமிழ்,தெலுங்கு,இந்தி, கன்னடம் என அனைத்து மொழிப்படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.

இந்தியில் அபிதாப் பச்சனுடன் குட்பை திரைப்படம் அக்டோபர் 7ந் தேதி வெளியாக உள்ளது.

வாரிசு

வாரிசு

ராஷ்மிகா மந்தானா நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யுடன் ஏகபட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஏற்கனவே இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப்பச்சனுடன் குட்பை

அமிதாப்பச்சனுடன் குட்பை

தமிழ் தெலுங்கு இந்தி என ரவுண்டு கட்டி நடித்து வரும் ராஷ்மிகா அமிதாப்பச்சனுடன் இணைந்து குட்பை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில் படம் அக்டோபர் 7ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தில் அமிதாப்பின் மகளாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

 ஏய் சாமி...வாயா சாமி

ஏய் சாமி...வாயா சாமி

இத்திரைப்படத்தின் ப்ரோஷன் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா மாணவர்கள் முன்னிலையில் 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற ஏய் சாமி...வாயா சாமி பாடலுக்கு இடுப்பை வளைத்து தெளிந்து ஆட்டம் போட்டார்.

செம ஆட்டம்

செம ஆட்டம்

ராஷ்மிகா மந்தானாவின் ஆட்டத்தை பார்த்த மாணவர்கள் மிகப்பெரிய கரகோஷம் எழுப்பினார்கள். இதுகுறித்த வீடியோக்கள் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை ராஷ்மிகா மந்தானாவின் நலம் விரும்பிகள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.

புஷ்பா

புஷ்பா

புஷ்பா திரைப்படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா, பான் இந்தியா ஸ்டாராக மாற்றியுள்ளார். புஷ்பா படத்தில் அவரது கதாபாத்திரம் அவருக்கு கனகச்சிதமாக பொருந்து விட்டது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இரண்டாம் பாகத்திற்கும் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதுமட்டும் இல்லாமல் மிஷன் மஞ்சு மற்றும் அனிமல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X