Rashmika Mandanna On Vijay Devarakonda - ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவுடன் ஒரே வீட்டில் வசிக்கிறாரா?

ஹைதராபாத்: Rashmika Mandanna On Vijay Devarakonda (விஜய் தேவரகொண்டா குறித்து ராஷ்மிகா மந்தனா) விஜய் தேவரகொண்டாவுடன் ஒரே வீட்டில் வசிப்பதாக வெளியான தகவலை அடுத்து ராஷ்மிகா மந்தனா விளக்கம் அளித்திருக்கிறார்.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதன் பிறகு தெலுங்கில் கால் பதித்த அவர் தன்னுடைய திறமையால் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். அவர் நடித்த புஷ்பா படம் இந்திய அளவில் மெகா ஹிட்டாகி வசூலை வாரிக்குவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அளவிலும் அவர் கவனிக்கப்படகூடிய நடிகையாக இருக்கிறார்.

Rashmika Mandhana has given an explanation after the news that Vijay Devarakonda is living in the same house

நேஷனல் க்ரஷ், எக்ஸ்பிரெஷன் குயின் ராஷ்மிகா மந்தனா: தெலுங்கில் அவரது நடிப்பை பார்த்த மற்ற மொழி திரையுலகமும் அவரை வரவேற்க தயாராகியிருக்கிறது. அந்தவகையில் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் ஜோடி சேர்ந்தார். ஆனால் அந்தப் படமும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் ராஷ்மிகா மீதான க்ரஷும், க்ரேஸும் ரசிகர்களுக்கு குறையவில்லை. இந்தச் சூழலில் அடுத்ததாக தமிழில் ரெயின்போ படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் ராஷ்மிகா. தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் அனிமல், மிஷன் மஜ்னு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவரை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரெஷன் குயின் என்றும் அழைக்கின்றனர்.

விஜய் தேவரகொண்டாவுடன் காதலா: விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் முதல் படத்திலிருந்தே கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. அதனைத் தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இதனையடுத்து விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலிக்கிறார்கள் எனவும், இரண்டு பேரும் ஒன்றாக மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர் எனவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இருவரும் அதுகுறித்த எந்த கருத்தையும் கூறவில்லை. சூழல் இப்படி இருக்க அவர்கள் இருவருக்குமிடையேயான காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாகவும் ராஷ்மிகா தற்போது இன்னொரு நடிகரை காதலித்துவருவதாகவும் தகவல்கள் தீயாய் பரவின.

Rashmika Mandhana has given an explanation after the news that Vijay Devarakonda is living in the same house

விஜய் தேவரகொண்டாவுடன் ஒரே வீட்டில் வசிக்கிறாரா ராஷ்மிகா: இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் எனவும் தகவல் வெளியாகியது. அதுமட்டுமின்றி, விஜய் தேவரகொண்டாவுக்கு மிகவும் பிடித்த மோதிரத்தை ராஷ்மிகா மந்தனா அணிந்திருக்கிறார். எனவே விரைவில் நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் எனவும் தெலுங்கு மீடியாக்களில் கிசுகிசுக்கப்பட்டது. இச்சூழலில் ராஷ்மிகா மந்தனா இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அய்யோ ரொம்ப யோசிக்காதீங்க பாபு" என பதிவிட்டுள்ளார். தற்போது அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா பற்றிய கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X