“முன்னாள் காதலர்களை சந்திக்கிறேன்… அந்த நடிகரும் ஓக்கே தான்”: ராஷ்மிகா லிஸ்ட்ல இன்னும் எத்தன பேரு?

ஐதராபாத்: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் படத்தில் நடித்த பின்னர் ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட் உயரத் தொடங்கியது.

இந்நிலையில், தனது முன்னாள் காதலர்கள் குறித்தும், பிரபல நடிகருடனான ரிலேஷன்ஷிப் பற்றியும் மனம் திறந்துள்ளார் ராஷ்மிகா.

டோலிவுட்டில் ராஷ்மிகா மந்தனா

டோலிவுட்டில் ராஷ்மிகா மந்தனா

கன்னடத்தில் 2016ம் ஆண்டு வெளியான 'கிரிக் பார்ட்டி' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அதன் பின்னர் தெலுங்கிலும் நடிக்கத் தொடங்கினார். 'கீதா கோவிந்தம்' படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, தனது க்யூட்டான எக்ஸ்பிரஷ்ன்களால் ரசிகர்களை சொக்க வைத்தார். முக்கியமாக க்ளைமேக்ஸ் காட்சியில் விஜய் தேவரகொண்டாவுக்கு லிப்லாக் கிஸ் அடித்து வேற லெவலில் ட்ரெண்டானார் தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார் ராஷ்மிகா.

விஜய்யுடன் ஜோடி சேர்ந்தாச்சு

விஜய்யுடன் ஜோடி சேர்ந்தாச்சு

தெலுங்கில் டாப் ஹீரோயினாக கலக்கிய ராஷ்மிகாவுக்கு சுல்தான் படத்தில் கார்த்தியுடன் நடிக்கும் சான்ஸ் கிடைத்தது. அந்தப் படம் மூலம் தமிழிலும் அடியெடுத்து வைத்த ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா' படத்தில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக மாறினார். அப்படியே தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் 'வாரிசு' படத்தில் தளபதி விஜய்யுடன் டூயட் பாடி வருகிறார். அதேபோல் இந்தியிலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'குட்பை' படத்தில் நடித்துள்ளார் இந்தத் திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் காதலர்களுடன்

முன்னாள் காதலர்களுடன்

எதையுமே பட்டென மனம் திறந்து பேசிவிடும் ராஷ்மிகா மந்தனா இப்போது தனது முன்னாள் காதலர்கள் பற்றி ஓப்பனாக பேசியுள்ளார். காதலன் என ஒருவரை குறிப்பிடாமல், காதலர்கள் என ராஷ்மிகா கூறியுள்ளது ரசிகர்களையே தலைசுற்ற வைத்துள்ளது. "என்னோட லைஃப் ரொம்ப வெளிப்படையானது. நான் எனது முன்னாள் காதலர்களை இப்போதும் நல்ல நண்பர்களாகவே பார்க்கிறேன். அவர்களின் மனைவிகளை சந்திக்கவும் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. முன்னாள் காதலர்களுடன் நட்பில் இருப்பது நல்ல பண்பு இல்லை என்று மற்றவர்கள் கூறலாம். ஆனால் நான் யாருக்கும் விரோதியாக இருக்க மாட்டேன்" எனக் கூறியுள்ளார்.

எனக்கு மகிழ்ச்சி தான்

எனக்கு மகிழ்ச்சி தான்

இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிவாகி சில காரணங்களால் அது நடக்காமல் போனது. மேலும் சில பிரபலங்களுடன் இணைத்தும் கிசுகிசுக்கப்பட்டார். இன்னொரு பக்கம் ராஷ்மிகாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே காதல் என்றும் செய்திகள் வெளியாகின. 'கீதா கோவிந்தம்' படத்தில் நடிக்கும் போதே இருவருக்குமான கெமிஸ்ட்ரி சும்மா அள்ளியது. அதுவும் அந்த லிப்லாக் கிஸ் இப்போதும் வேலை செய்யுது போல என ரசிகர்கள் கூறி வந்தனர். இதுகுறித்தும் மனம் திறந்து பேசியுள்ள ராஷ்மிகா மந்தனா, "விஜய் தேவரகொண்டாவுடன் காதல் என இணைத்து பேசுவதை மகிழ்ச்சியாகவே எடுத்துக்கொள்கிறேன்" என கெத்தாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X