Thalapathy 64: விஜய்க்கு ஜோடியாகும் கார்த்தி, விஷால் ஹீரோயின்கள்?
சென்னை: தளபதி 64 படத்தில் 2 ஹீரோயின்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
விஜய் தற்போது அட்லியின் இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் மாநகரம் படம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்போதைக்கு தளபதி 64 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தில் விஜய்க்கு ஜோடி யார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தளபதி 64 படத்தில் விஜய்யுடன் ஜோடி சேரப் போவது யார் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ரகுல் ப்ரீத் சிங்
ஏற்கனவே விஜய்யுடன் சேர்ந்து நடித்த கீர்த்தி சுரேஷ் தான் அவருக்கு ஜோடியாகக்கூடும் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் விஜய்யின் ராசியான நடிகையான த்ரிஷா அவருடன் ஜோடி சேரப் போவதாக கூறப்பட்டது. அதன் பிறகு ரகுல் ப்ரீத் சிங் விஜய்யுடன் டூயட் பாடப் போவதாக தகவல் வெளியானது.

ரஷ்மிகா
கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ரகுல் ப்ரீத் சிங் ஆகிய மூன்று பேருமே தளபதி 64 படத்தில் நடிக்கவில்லை. மாறாக கன்னட நடிகையான ரஷ்மிகா மந்தனாவும், அடங்க மறு படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த ராஷி கன்னாவும் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஷி கன்னா
ராஷி கன்னா கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஒரேயடியாக ஒல்லிக்குச்சியாகி ரசிகர்களை அதிர வைத்த நிலையில் ராஷி கன்னாவின் பக்கம் பலரின் கவனமும் திரும்பியுள்ளது. ரஷ்மிகா மந்தனா கார்த்தி படத்தை அடுத்து விஜய் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அவர் எடுத்த எடுப்பிலேயே படுவேகமாக வளர்கிறார்.

தளபதி 64
லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி படத்தை எடுத்து முடித்துள்ளார். அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. இந்த படத்தை அடுத்து அவர் இயக்கும் தளபதி 64 படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். படத்தை விஜய்யின் உறவினரான சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது. தளபதி 64 ஹீரோயின்கள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இரண்டு ஹீரோயின்கள் என்பது மட்டும் உறுதியாம்.


Click it and Unblock the Notifications











