Don't Miss!
- News
உலகம் முழுவதும் 14,26,85,505 பேர் கொரோனாவிற்கு பாதிப்பு - 30,42,825 பேர் மரணம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 20.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரப்போகுது…
- Sports
தல... சின்ன தல... ஒவ்வொருத்தரா பெவிலியனுக்கு அனுப்பிய ராஜஸ்தான் பௌலர்... மிகச்சிறப்பு!
- Automobiles
ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு பெரிய மனசுங்க!! மீட்டியோர் 350 பைக்கில் உத்தரகாண்ட் செல்லும் பெங்களூர் பெண்!
- Finance
இனி அமெரிக்க டாப் நிறுவனங்களில் ஈசியா முதலீடு செய்யலாம்.. பேடிஎம்-ன் புதிய சேவை..!
- Education
ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரசிகர்கள் ரொம்ப க்யூட்.. 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா..' நடிகை ராஷ்மிகா மந்தனா சிலிர்ப்பு!
சென்னை: கூகுளின் 'நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா' பெருமையை அடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்திருக்கிறார், தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா.
இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

கீத கோவிந்தம்
கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படம் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அடுத்து சலோ படம் மூலம் தெலுங்குக்கு சென்றார். அடுத்து, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதகோவிந்தம் கவனிக்கப்பட, வாய்ப்புகள் குவிந்தன.
தேவதாஸ், விஜய் தேவரகொண்டாவுடன் டியர் காம்ரேட் படங்களில் நடித்தார்.

அல்லு அர்ஜுனின் புஷ்பா
தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவாக மகேஷ்பாபு ஜோடியாக நடித்த சரிலேரு நீக்கெவ்வரு, சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இதை சுகுமார் இயக்குகிறார்.

நேஷனல் க்ரஷ்
இந்நிலையில், 2020 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகமானோர் தேடிய நடிகையாக ராஷ்மிகா மந்தனா இருப்பதை அடுத்து, அவரை நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியாவாக்கி இருக்கிறது கூகுள். அதில், நேஷனல் க்ரஷ் ஆப் இந்தியா என்று டைப் செய்தால், நடிகை ராஷ்மிகா பெயர் இடம்பெறுகிறது. அவர் பிரபலமான ஹீரோயின்களை முந்தி, இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

ஹேஷ்டேக் டிரெண்ட்
சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே அவர் இப்படியொரு பெருமையை பெற்றிருப்பதையடுத்து ரசிகர்கள் மீம்ஸ்களை உருவாக்கி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, சோசியல் மீடியாவில்
#NationalCrushRashmika என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.

அவர்கள் சோ க்யூட்
இதையடுத்து, அந்த ஹேஷ்டேக்கை டேக் செய்து சோசியல் மீடியாவில் சிலிர்ப்புடன் பதிவிட்டுள்ள, நடிகை ரஷ்மிகா மந்தனா, இந்த ரசிகர்கள் உண்மையிலேயே சிறப்பானவர்கள். புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் அன்பு என்று கூறியுள்ளார்.