விஜய் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்க...ராஷ்மிகா தந்த க்யூட் பதில்
சென்னை : கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே தமிழ் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக இடம்பிடித்து விட்டார்.
சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் அடிக்கடி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் க்யூட்டாக பதில் சொல்லி, பலரின் மனதையும் கவர்ந்து வருகிறார்.

விஜய் பற்றி ஒரே வார்த்தையில்
அப்படி நேற்று இன்ட்ராகிராமில் பேசிய ராஷ்மிகாவிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மட்டுமல்ல விஜய்யுடன் அப்போது இணைந்து நடிக்க போகிறீர்கள் என்றும் பலர் கேட்டனர். அதில் ஒரு ரசிகர், விஜய் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லும்படி கேட்டார்.

அசர வைத்த ராஷ்மிகா
அதற்கு ராஷ்மிகா, லவ் என பதிலளித்து அசர வைத்தார். மற்றொரு ரசிகர், விஜய் பற்றி ஒரே வார்த்தையில் விளக்குங்கள் என்றார். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, விரைவில் ஒரு படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளேன். அவருடன் நடிக்க நானும் ஆர்வமாக உள்ளேன் என்றார்.

விரைவில் விஜய்க்கு ஜோடி
தற்போது விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்திலேயே ராஷ்மிகா மந்தனா தான் ஹீரோயினாக நடிக்க இருந்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அது முடியாமல் போனதால், பூஜா ஹெக்டேவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது விஜய்யுடன் தான் ஜோடி சேர உள்ளதை ராஷ்மிகாவே உறுதி செய்து விட்டதால் ரசிகர்கள் குஷியாகி விட்டனர்.

தெலுங்கு ஹீரோக்கள் பற்றியும் கேள்வி
விஜய்யை பற்றி மட்டுமல்ல விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுன் போன்ற தெலுங்கு ஹீரோக்கள் பற்றியும் அடுக்கடுக்காக பல மொழிகளில் கேள்விகள் கேட்டு திக்குமுக்காட வைத்து விட்டனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











