ஒரு நாளைக்கு எவ்ளோ சிகரெட் புடிப்பீங்க... ராஷ்மிகாவோட கூல் பதிலை பாருங்க
மும்பை : கோலிவுட்டில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சுல்தான் படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை தந்தது.
அடுத்ததாக அல்லு அர்ஜூனுடன் அவர் நடித்துள்ள புஷ்பா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
சமூக வலைதளங்களில் பிசியாக உள்ள அவர், தன்னுடைய சிகரெட் பழக்கம் குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அளித்த பதில் வைரலாகி வருகிறது.

சுல்தான் படத்தில் ராஷ்மிகா
நடிகர் கார்த்திக்குடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான சுல்தான் படம் சிறப்பான வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. கார்த்திக் மற்றும் ராஷ்மிகா இடையிலான கெமிஸ்ட்ரி சிறப்பாக பேசப்பட்டது. கிராமத்து கெட்டப்பில் வந்தாலும் தன்னுடைய கேரக்டருக்கு அவர் பலம் சேர்த்திருந்தார்.

மிஷன் மஞ்சூ படத்தில் நடிப்பு
தற்போது பாலிவுட் படங்களில் ராஷ்மிகா கவனம் செலுத்தி வருகிறார். மிஷன் மஞ்சூ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் அவர் நடித்துள்ள புஷ்பா படமும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி உள்ளது. தொடர்ந்து சில படங்களில் அவர் ஒப்பந்தமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புகைப்படங்கள் பகிர்வு
ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது போட்டோஷூட்கள் மூலமும் தனிப்பட்ட வகையிலும் பல புகைப்படங்களை அவர் பகிர்ந்து வருகிறார். மேலும் ரசிகர்களுடனும் தொடர்பில் இருந்து வருகிறார்.
Recommended Video

ராஷ்மிகாவிடம் கேள்வி
இந்நிலையில் அவரிடம் ரசிகர் ஒருவர், ராஷ்மிகாவிடம் அவர் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட்டுகளை பிடிப்பார் என்ற கேள்வியை எழுப்பினார். இந்த கேள்விக்கு சிரிப்புடன் பதிலளித்த ராஷ்மிகா, தான் சிகரெட் பிடிப்பதில்லை என்றும் மேலும் சிகரெட் பிடிப்பவர்களை பார்த்தாலே ஓடிவிடுவேன் என்றும் கூறியுள்ளார். இந்த பதில் ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











