பலவந்தமாக கட்டிப்பிடித்து.. பின்னால் தட்டி.. பாடலால் வெடித்த சர்ச்சை.. ராஷ்மிகா படத்துக்கு எதிர்ப்பு

சென்னை: ராஷ்மிகா நடித்துள்ள படத்திற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Pushpa First Look | Stylish Star Allu Arjun 37th Birthday

கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராஷ்மிகா. கன்னட படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார்.

அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் வசூலை குவித்ததால் கன்னடத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதனை தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமானார் ராஷ்மிகா.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

தெலுங்கில் அவர் நடித்த சரிலேறு நீக்கெவரு, பீம்ஷா ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றது. இதனால் கன்னடம் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக உள்ளார் ராஷ்மிகா மந்தனா. அதோடு தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் அதிக சம்பளம் பெரும் நடிகையாகவும் உள்ளார் ராஷ்மிகா மந்தனா.

தெலுங்கில் புஷ்பா

தெலுங்கில் புஷ்பா

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ராஷ்மிகா, அவ்வப்போது தனது போட்டோக்களையும் ஷேர் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். இந்நிலையில்
தமிழில் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. அதேபோல் தெலுங்கில் புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பொகரு படம்

பொகரு படம்

அல்லு அர்ஜுனுடன் நடிக்கும் இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி பெரும் வைரலானது. இதேபோல் கன்னடத்தில் பொகரு என்ற படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. ஆக்ஷன் பிளாக்கான இப்படத்தை நந்தா கிஷோர் இயக்குகிறார். இதில் துருவா சர்ஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா.

கரபூ பாடல்

கரபூ பாடல்

இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள கரபூ பாடல் கடந்த வாரம் ரிலீஸானது. ஒரு வாரத்துக்குள் 8 மில்லியன் வியூஸ்களை குவித்துள்ள இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த பாடல் பெண்களின் சுயமரியாதையை இழிவுபடுத்தி காட்சியாக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஹீரோ டார்ச்சர்

ஹீரோ டார்ச்சர்

அந்தப் பாடலில் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நடத்தைக்காக இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். ஹீரோ துருவா சர்ஜா, ஹீரோயினான ராஷ்மிகாவை டார்ச்சர் செய்து துன்புறுத்துவதாக உள்ளது. ஹீரோயினை, ரவுடி போன்று நீண்ட முடியை கொண்ட ஹீரோ காதலிக்க சொல்லி வற்புறுத்துவதாக உள்ளது.

கட்டிப்பிடிப்பது..

கட்டிப்பிடிப்பது..

இதற்காக பைக்கை கொளுத்துவது, கண்ணில் படுவதை எல்லாம் அடித்து நொறுக்குவது, ஹீரோயினை பலவந்தமாக கட்டிப்பிடிப்பது, பின்னாடி தட்டுவது, காலை போட்டு அணைப்பது, கரண்ட் ஷாக் கொடுப்பேன், கொலை செய்வேன் என மிரட்டுவது, துணியை பிடித்து இழுப்பது என உள்ளது அப்பாடல்.

கோபம் அதிகரிப்பு

ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட இப்பாடல் ராமநவமி நாளில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஹீரோ கதாநாயகியை டார்ச்சர் செய்த விதம் குறித்து பெண் நெட்டிசன்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்கனவே சமூகத்தில் பெண்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில், ஹீரோவின் அதிகப்படியான வன்முறை, துன்புறுத்தல் அவர்களின் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X