சிவகார்த்திகேயன் ஜோடியாகும் விஜய் ஹீரோயின்?
Recommended Video

சென்னை: விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து எடுக்கும் படத்தில் ரஷ்மிகா மந்தனா நடிப்பார் என்று கூறப்படுகிறது.
தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்கிறார். எஸ்கே 17 என்று தற்போதைக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே அன்பான இயக்குநரே தயவு செய்து நயன்தாராவை ஹீரோயினாக போட வேண்டாம் என்று பலர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம் விக்னேஷ் சிவன். இது தொடர்பாக ரஷ்மிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் படம் மூலம் பிரபலமான ரஷ்மிகா பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார்.
கார்த்தி படத்தில் நடித்து வரும் அவருக்கு சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து ரஷ்மிகா நடித்த டியர் காம்ரேட் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
ரஷ்மிகா கோலிவுட் வந்த வேகத்தில் இரண்டு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











