Rashmika Mandanna: மிரள வைக்கும் ராஷ்மிகா! ரகசியமாக இறக்குமதி செய்யப்பட்ட 100 பேர்.. எதற்காகத் தெரியுமா?

சென்னை: பல ஆண்டுகளாக பொதுவெளியில் அனைவருக்கும் தெரிந்தாலும், ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய தேவரகொண்டா காதல் கதையை அவர்கள் வெளியில் சொன்னதே இல்லை. ஆனாலும் ரசிகர்களின் கணிப்பு பல நேரங்களில் சரியாகவே இருந்துள்ளது என்பதைப் போல இவர்களின் காதல் விவகாரத்திலும் சரியாகவே இருந்துள்ளது. இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் வரும் 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் அரண்மனையில் திருமணம் செய்து கொள்கிறார்கள், இது மட்டும் இல்லாமல் வரும் மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படி இருக்கையில் ராஷ்மிகா மந்தனா தனது திருமண ஏற்பாடுகளில் மிகவும் முக்கியமான முடிவை ஒன்றை எடுத்துள்ளாராம். அதாவது தனது திருமணம் மிகவும் நெருங்கிய வட்டத்தினர் மட்டுமே பங்கு பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அவர்களின் பாதுகாப்பையும், தனது திருமண தொடர்பாக மற்றவர்கள் யாரும் எதையும் வெளியிட்டு விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் இருக்கிறாராம். இதனால் வெளிநாட்டில் இருந்து 100 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த களமிறக்கி உள்ளாராம்.

Rashmika-Vijay Devarakonda Wedding 100 Foreign Security Guards to Turn Udaipur Palace into a Fortress
Photo Credit:

100 பேர்: அதாவது இதற்காகவே பிரத்யேகமாக உள்ள செக்யூரிட்டி ஏஜென்சியிடம் பேசி அவர்களுக்கு பல கோடிகள் கொடுத்து இந்த 100 பேரை வரவழைக்க திட்டமிட்டுள்ளாராம் ராஷ்மிகா மந்தனா. இவர்களின் முக்கிய வேலையே ராஜஸ்தான் அரண்மனையைச் சுற்றி பாதுகாப்பது தான். இது மட்டும் இல்லாமல், இவர்கள் ராஜஸ்தான் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும், காவல்துறை சொல்வதை கேட்டு அவர்களுக்கு ஒத்துழைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் நாட்டின் முக்கிய விஐபிக்கள், பாலிவுட், டோலிவுட், கோலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொள்வார்கள் என்பதால் அதற்காகவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளனர்.

படப்பிடிப்புத் தளம்: திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் ராஷ்மிகா மந்தனா இன்னும் படப்பிடிப்புத் தளத்தில் தான் இருக்கிறாராம். அதுவும் 22ஆம் தேதி வரை நடித்துக் கொடுத்துவிட்டு, திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்னர் தான் தனது திருமண விசேஷங்களில் கலந்து கொள்ள இருக்கிறாராம். பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று பேச்சுகள் அடிபட்டு வந்த நிலையில், இவர்கள் இருவரும் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்ற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பலரும் இப்போது இருந்தே வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Rashmika-Vijay Devarakonda Wedding 100 Foreign Security Guards to Turn Udaipur Palace into a Fortress
Photo Credit:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X