Rashmika Mandanna Honeymoon: ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா ஹனிமூனுக்கு எங்க போயிருக்காங்க தெரியுமா?
ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனா - நடிகர் விஜய் தேவரகொண்டா கடந்த மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பிரபலங்கள் பலரும் இவர்களின் திருமணம் மற்றும் ரிஷப்ஷன் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றாலும், நாடு முழுவதும் உள்ள சில பெரிய பெரிய கோவில்களில் அன்னதானம் நடத்தினர். மேலும் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி அவர்களின் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டனர்.
அண்மையில் ஒரு குழந்தை விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் மற்றவர்களுக்கு எல்லாம் லட்டு கொடுக்கிறார்கள், ஆனால் எனக்கு கொடுக்கவில்லை. மற்றவர்களுக்கு எல்லாம் அன்னதானம் வழங்குகிறார்கள் எனக்கு வழங்கவில்லை. நாமும் அவர்களின் நண்பர்கள் தானே, ரசிகர்கள் தானே என்று செம்ம கியூட்டாக வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் அந்த குழந்தையை தங்களது வீட்டிற்கு அழைத்து செம்ம கியூட்டாக அதேபோல் விருந்து வைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஹனிமூன் டிரிப்: இப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் ஹனிமூனுக்கு எங்கு செல்கிறார்கள், இவர்களின் திட்டம் என்ன என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இந்நிலையில் பலரும் பல தீவுகளை குறிப்பிட்டு வந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் ரசிகர்கள் பலரும் தங்களது விருப்ப இடங்களை எல்லாம் கூட கூறிக் கொண்டு வந்தார்கள். இப்படி இருக்கையில் நடிகர் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா தங்களது ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றுள்ளார்கள் என்று இணையத்தில் அவர்கள் இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டு நிற்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ரசிகர்கள்: இந்த புகைப்படத்தை அவர்கள் இருவரும் பகிரவில்லை என்றாலும், இணையவாசிகள் சிலர் இதை அவர்களின் ஹனிமூன் புகைப்படமா? அல்லது இருவரும் காதலித்துக் கொண்டிருந்த போது அவுட்டிங் சென்ற போது யாராவது எடுத்த புகைப்படமா என்ற கேள்வியையும் இணையவாசிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











