Don't Miss!
- News வாக்கு பெட்டியில் தாமரை.. வாக்குச்சாவடி வாசலிலும் "தாமரைப்பூ".. குவிந்த திமுகவினர்.. புதுச்சேரி பரபர
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஸ்னா விளம்பரத்தில் நடிச்ச குட்டிப் பொண்ணு இப்போ அம்மாவாகிட்டாங்க!
Recommended Video
மும்பை : 'லண்டன்' படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்த நடிகை அங்கிதா ஜவேரி தற்போது ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
'ரஸ்னா' குளிர்பான விளம்பரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் அங்கிதா. பலருக்கும் அந்த நாஸ்டால்ஜிக் விளம்பரம் நினைவிருக்கலாம்.
வளர்ந்த பின், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார் அங்கிதா. சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டிலான அங்கிதா தற்போது அம்மாவாகி உள்ளார்.
ரஸ்னா விளம்பரம்
'ரஸ்னா' குளிர்பான விளம்பரத்தின் மூலம் புகழ்பெற்றவர் அங்கிதா ஜவேரி. திரைப்படங்களைப் போல சில தொலைக்காட்சி விளம்பரங்கள் நம் மனதை விட்டு அகலாது. அப்படி பலருக்கு விருப்பமாக இருந்த 'ரஸ்னா' விளம்பரத்தில் நடித்த குட்டிப்பொண்ணு இவர்தான்.
லண்டன் ஹீரோயின்
தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர் சுந்தர்.சி இயக்கிய 'லண்டன்' திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதில் பிரசாந்த் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு 'தகதிமிதா', 'திரு ரங்கா' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஜூனியர் என்.டி.ஆருடன்
தெலுங்கில் ராஜமௌலி இயக்கிய 'சிம்ஹாத்ரி' படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்தார். ஒரு கட்டத்தில் நடிக்க வாய்ப்பு குறைந்ததும் சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார்.
தொழிலதிபரை மணந்தார்
கடந்த ஆண்டு விஷால் ஜெகதாப் என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். தற்போது ஐதராபாத்தில் வசித்து வரும் அங்கிதா ஒரு ஆண் குழந்தைக்கு அம்மாவாகி உள்ளார்.