twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராட்சசன் இன்பராஜை விட மோசமானவர்கள் நிறைய பேர் உள்ளனர்.. இயக்குநர் ராம்குமார் பகீர் ட்வீட்

    |

    சென்னை: கே.கே. நகரில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுக்களை எழுப்பி உள்ளனர்.

    Recommended Video

    Padma Seshadri Rajagopalan கைதானது எப்படி? பரபர பின்னணி | OneIndia Tamil

    அதன் எதிரொலியாக #PSBB என்ற ஹாஷ்டேக் நேற்று ட்விட்டரில் டிரெண்ட் ஆனது.

    அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில், இயக்குநர் ராம்குமாரின் ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

    பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி விவகாரம்… திரைப்பிரபலங்கள் ஆவேசம் !பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி விவகாரம்… திரைப்பிரபலங்கள் ஆவேசம் !

    படிக்கிற இடத்தில்

    படிக்கிற இடத்தில்

    அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று இருந்த நிலை மாறி, பெண்கள் மாநில அளவில் முதலிடத்தை பெற்று மாணவர்களை விட கல்வியில் உயர்ந்து விளங்கி வரும் நிலையில், அவர்களை மீண்டும் வீட்டுக்குள்ளே அடைப்பது போல சில ஆசிரியர் உருவில் இருக்கும் மிருகங்கள் செய்யும் தவறால் பல நல்லாசிரியர்களுக்கும் பெயர் கெட்டுப் போகிறது.

    ராஜகோபாலன் கைது

    ராஜகோபாலன் கைது

    சென்னை கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் 27 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஆசிரியர் ராஜகோபாலன் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை சமூக வலைதளத்தின் வாயிலாக அடுக்கினர். இந்நிலையில், ராஜகோபாலனிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரது மொபைல் மற்றும் லேப்டாப்களை பரிசோதனை செய்தனர். ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ராட்சசன் படம் வந்தப்போ

    ராட்சசன் படம் வந்தப்போ

    "இன்னிக்கு முழுக்க ஏதேதோ வேலைல இருந்தாலும் இந்த PSBB school விவகாரம், அந்த ராஜகோபலனின் கீழ்மையும்தான் ஓடிட்டே இருந்துச்சு. ராட்சசன் படம் வந்தப்ப, மாணவிகளின் பெற்றோர் எவ்வளவு பயப்படுவாங்க இதெல்லாம் தவறான படம்னு வாதம் செய்தேன். மிகக்கடுமையான தண்டனை என்பது முதல் தேவை" என ரசிகர் ஒருவர் பதிவிட்ட ட்வீட்டுக்கு அந்த படத்தின் இயக்குநர் ராம்குமார் பதில் அளித்துள்ளார்.

    இன்பராஜ் கதாபாத்திரம்

    இன்பராஜ் கதாபாத்திரம்

    இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018ம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படத்தில், இதே போல பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுக்கும் ஆசிரியர் கதாபாத்திரமாக இன்பராஜ் எனும் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

    இன்பராஜை விட மோசமானவர்கள்

    இன்பராஜை விட மோசமானவர்கள்

    ரசிகரின் அந்த ட்வீட்டுக்கு பதில் அளித்த ராம்குமார், "ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யபடவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்!" என பகீர் கிளப்பி உள்ளார்.

    English summary
    Director Ramkumar tweet about PSBB school sexual harassment issue and his Ratchasan movie character teacher Inbaraj in his tweet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X