தெலுங்கில் தயாராகவுள்ள ராட்சசன் 2ம் பாகம்.. ஹீரோவாக முன்னனி தமிழ் நடிகர்

சென்னை: 2018ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லராக வெளியான படம் ராட்சசன்.

இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், அபிராமி, யாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

2018ம் ஆண்டில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக ராட்சசன் முதன்மை வகித்தது. தமிழ் சினிமாவிலும் முக்கிய படமாக கருதப்படுகிறது.

தெலுங்கு ரீமேக்

தெலுங்கு ரீமேக்

தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தை தெலுங்கில் ரமேஷ் வர்மா இயக்க, பெல்லம்கொன்டா சீனிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் நடித்தனர். ராட்சசடு என்ற பெயரில் 2019ம் ஆண்டு வெளியாகி அங்கேயும் வெற்றி பெற்று.

இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

இதையடுத்து இந்த படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். ஹிந்தியில் அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருவது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் உறுதியளித்து ரசிகர்களை மெருகேற்றினார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழில் வெளிவருவதற்கு முன்னரே தெலுங்கில் ராட்சசடு 2ம் பாகத்திற்கு கதையை ரமேஷ் வர்மா தயார் செய்து விட்டார். அண்மையில் மிரட்டலான போஸ்டருடன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் ரமேஷ் வர்மா.

Recommended Video

விஷ்ணு விஷால் 'ராட்சசன்' விமர்சனம் | Ratchasan movie review
பரவும் தகவல்

பரவும் தகவல்

இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க தமிழ் நடிகரான விஜய் சேதுபதியிடம் இயக்குனர் ரமேஷ் வர்மா பேசியுள்ளதாகத் சொல்லப்படுகிறது. அவரும் இதற்கு ஒப்புக்கொண்டதாக பேசப்படுகிறது. ஆனால் விஜய் சேதுதிக்கு தற்போது 20க்கும் மேற்பட்ட படங்கள் லைன் அப்பில் உள்ளதால் இந்தப் படத்திற்கு எப்படி தேதிகளை ஒதுக்கித் தருவார் என்பது தான் கேள்வி குறியாக உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X