விஜய் ஆண்டனியின் ரத்தம் முதல் த்ரிஷாவின் தி ரோட் வரை.. இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்!
சென்னை: கடந்த வாரம் விடுமுறை தினத்தை முன்னிட்டு ராகவா லாரன்ஸின் சந்திரமுகி 2, ஜெயம் ரவியின் இறைவன், சித்தார்த்தின் சித்தா படங்கள் வெளியானது.
அடுத்த வாரம், விஜய்யின் லியோ படம் வெளியாக உள்ள நிலையில், இந்த வாரம் வெள்ளிக்கிழமை வரிசையாக பல படங்கள் வெளியாக உள்ளன.
இதில் விஜய் ஆண்டனியின் ரத்தம், த்ரிஷாவின் தி ரோட் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது.

800: முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்ததால் அவரின் வாழ்க்கை வரலாறு 800 என்கிற பெயரில் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில், நாயகனாக ஆஸ்கர் விருது பெற்ற 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் நடித்த மதூர் மிட்டல் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் மஹிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராம மூர்த்தி, ரித்விகா, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது.
ரத்தம்: வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விஜய் ஆண்டனி நடிப்பில் வரும் 6 ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ரத்தம். இவரது மகள் அண்மையில் தற்கொலை செய்து கொண்டு இறந்த பிறகும் விஜய் ஆண்டனி கடமை தவறாமல் அந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சி எஸ் அமுதன் எழுதி இயக்கி உள்ள இத்திரைப்படத்திற்கு நாராயணன் இசை அமைத்துள்ளார்.
இறுகப்பற்று: யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள படம் இறுகப்பற்று. கல்யாணம்-காதல் உறவு என்றால் ஆயிரம் பிரச்சனை வரத்தான் செய்யும், அதை தாண்டி லவ் ஜெயிக்குதா இல்லையா என காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது.
ஷாட் பூட் த்ரீ: அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கி தயாரித்துள்ள படம் ஷாட் பூட் த்ரீ. பல்வேறு உலக நாடுகளில் நடை பெற்று வரும் திரைப்பட விழாக்களில் சிறந்த குழந்தைகள் திரைப்படமாக ஷாட் பூட் த்ரீ படம் திரையிடப்படுகிறது., அக்டோபர் 6ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தில், வெங்கட் பிரபு, சினேகா, யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
தி ரோட்: த்ரிஷா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி ரோட் படத்தின் 6ந் தேதி வெளியாக உள்ளது. 2000 ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
எனக்கு என்டே கிடையாது: ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ள படம், எனக்கு என்டே கிடையாது. விக்ரம் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்துள்ளார். இத்திரைப்படம் வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











