மாஸ்டர் இசை வெளியீட்டுக்கு சிக்னல் கொடுத்த பிரபலம்.. அப்போ மாஸ் ஸ்பீச் இருக்கு.. ரசிகர்கள் குஷி!
Recommended Video
சென்னை: நடிகர் விஜய் வீட்டில் நேற்று முதல் தற்போது வரை நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் எந்த ரொக்கமும் கைப்பற்றவில்லை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வெயிட்டிங் என ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார்.
மாஸ்டர் படத்தின் அப்டேட்களை மறைமுகமாக கொடுத்து வரும் ரத்னகுமார், தற்போது இவ்வாறு பதிவிட்டுள்ளது விஜய் ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளது.

பாட்டு இருக்கு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான கைதி படத்தில் பாடல்கள் எதுவும் இடம் பெறவில்லை. மாஸ்டர் படத்தில் பாடல்கள் இருக்குமா? என சந்தேகம் கொண்ட ரசிகர்களுக்கு தற்போது ரத்னகுமார் போட்ட ட்வீட்டே பெரிய அப்டேட் ஆகி உள்ளது.

அனிருத் இசை
விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, கெளரி கிஷன், ரம்யா, செளந்தர்யா, மணிகண்டன், அர்ஜுன் தாஸ், பிரேம், ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அண்மையில் மாஸ்டர் படத்தின் டிராக் லிஸ்ட் என்ற ஒன்றும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ஆடியொ லாஞ்சுக்கு வெயிட்டிங்!
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சரவெடியாக பல விஷயங்களை நடிகர் விஜய் பேசி அசத்தியிருந்தார். தற்போது, நடைபெற்றுள்ள இந்த ரெய்டு விவகாரம் குறித்த மாஸான பேச்சு மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருக்கும் என தான் எதிர்பார்ப்பதாக அப்படத்தின் ரைட்டரான ரத்னகுமார் ட்வீட் போட்டுள்ளார்.
அதுக்குத்தான் வெயிட்டிங்
மாஸ்டர் படத்தின் அப்டேட்களை மறைமுகமாக கூறி வரும் ஆடை படத்தின் இயக்குநரும் மாஸ்டர் படத்தின் ரைட்டருமான ரத்னகுமார் தற்போது போட்டுள்ள ட்வீட்டை பார்த்து விஜய் ரசிகர்கள் சந்தோஷமடைந்துள்ளனர். தாங்களும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காகத் தான் காத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

கொஞ்சம் லேட்டா
தர்மம் தான் ஜெயிக்கும், நியாயம் தான் ஜெயிக்கும்.. ஆனா கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும் என இந்த தளபதி விஜய் ரசிகர் வருமான வரித்துறை வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ் அறிவிப்பை பதிவிட்டு கமெண்ட் செய்துள்ளார். இவரை போலவே மேலும், பல தளபதி ரசிகர்களும் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேச உள்ள பேச்சுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மாஸ்டர் ஷூட்டிங்
வருமான வரித்துறை அதிகாரிகள் நெய்வேலியில் நடைபெற்று வரும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் இருந்து விஜய்யை நேற்று விசாரணைக்கு அழைத்து வந்தனர். அதனால், நேற்று ஷூட்டிங் தடை பட்டது. ஆனால், இன்று விஜய்சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில்
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் இம்மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், வரும் மார்ச் மாதம் பிரம்மாண்டமாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும், பிகில் ஆடியோ லாஞ்சில் விஜய் பேசியதை விட செம்ம மாஸான பேச்சு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











