லோகேஷ் கனகராஜிடம் மோதிய ரத்னகுமார்.. மாஸ்டர் அப்டேட் கேட்டு மிரட்டல்.. என்ன ஆச்சு திடீர்னு?
சென்னை: மாஸ்டர் படமே இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், அடுத்த படத்திற்கான வேலைகளில் ஆயத்தமாகி விட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
நீங்க படத்தை தியேட்டரில் ரிலீஸ் பண்ணுங்க, நெட்பிளிக்ஸில் ரிலீஸ் பண்ணுங்க, நான் என் அடுத்த பொழப்பை பார்க்குறேன்னு எஸ்கேப் ஆகும் அவரை, நிறுத்திப் பிடித்து, ரசிகர்கள் சார்பாக அப்டேட் கேட்டு எதிர்த்துள்ளார் ரத்னகுமார்.
அவர் போட்ட பதிவை பார்த்த நெட்டிசன்கள் இது உலக மகா நடிப்புடா சாமி என அவரையும் சேர்த்து ஓட்டி வருகின்றனர்.

அதிரடி அறிவிப்பு
இன்று மாலை 6 மணிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாக போகிறது. இது தொடர்பாக நேற்று ஒரு அதிரடியான ட்வீட்டை போட்ட மாஸ்டர் இயக்குநரை தளபதி ரசிகர்கள் ரவுண்டு கட்டி மாஸ்டர் படத்தின் அப்டேட் எங்க? என்று செல்லமாக மிரட்டினார்கள்.

யார் ஹீரோ
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி உள்ள லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த பட அறிவிப்பை இன்று மாலை கூற உள்ளார் என்கிற செய்தி வெளியான உடன் என்ன படம்? யார் ஹீரோ? என்ற பல விதமான கேள்விகளும், அதற்கு கற்பனையான சில பதில்களையும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். எப்படியோ ஈவ்னிங் தெரியப் போகுது!

ரசிகர்கள் சார்பாக
மாஸ்டர் அப்டேட் விடாம உங்க அடுத்த பட அறிவிப்பை ஏன் விடுறீங்க என்ற கேள்வியை விஜய் ரசிகர்கள் கேட்டிருந்த நிலையில், ஆடை படத்தின் இயக்குநரும், மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவுமான இயக்குநர் ரத்னகுமார், ரசிகர்கள் சார்பாக மீம் போட்டு லோகேஷ் கனகராஜிடம் மாஸ்டர் அப்டேட்டை கேட்டு இருப்பது சுவாரஸ்யத்தை கிளப்பி இருக்கிறது.

அப்டேட் என்னாச்சு
மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம், இயக்குநர் ரத்னகுமாரே அப்டேட் கேட்டுள்ள நிலையில், தளபதி ரசிகர்கள் சிலர், அதானே அப்டேட் என்ன ஆச்சு? என்றும் மீம்களை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர். ப்ரோ நிங்களாவது எங்க சார்பில் அப்டேட் கேட்டு வாங்கிக் கொடுங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரொம்ப நடிக்கக் கூடாது
மாஸ்டர் படக் குழுவை சேர்ந்த நீங்களே இப்படி அப்டேட் கேட்பது போல ட்வீட் போட்டு உலக மகா நடிப்பை வெளிப்படுத்தக் கூடாது என்றும், எல்லோரும் ஒரே செட்டுன்னு தெரியும்.. ரொம்ப நடிக்கக் கூடாது என்றும் இயக்குநர் ரத்னகுமாரையும் விடாமல் சிறப்பாக செய்து வருகின்றனர் தளபதி ரசிகர்கள்.
Recommended Video

அப்டேட் எங்க
அதைத் தான் நாங்களும் கேக்குறோம் அப்டேட் எங்க? என இயக்குநர் ரத்னகுமாரை பங்கமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். சில ரசிகர்கள், அண்ணா எப்படியாவது அப்டேட் வாங்கி கொடுங்க என்றும், இவர் ட்வீட் போட்டுட்டாருல சீக்கிரமே அப்டேட் வந்துடும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











