ரெய்டு வந்தாலும் சரி.. ரெய்டு போனாலும் சரி.. தளபதி தான் கில்லி.. மேடையை தெறிக்கவிட்ட ரத்னகுமார்!

சென்னை: தளபதி விஜய்யின் மாஸான பேச்சுக்கு முன்னதாக மாஸ்டர் விஜய்யை பற்றி படத்தில் வொர்க் பண்ண பலரும் தெறியாக பேசி விழா மேடையை தெறிக்க விட்டனர்.

மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய இயக்குநர் ரத்னகுமார், மாஸ்டர் படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதுவதில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், பல குட்டி ஸ்டோரிகளை சொல்லியுள்ள ரத்னகுமார், ரெய்டு குறித்தும் பேசியுள்ளார்.

அப்டேட் கிங்

அப்டேட் கிங்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தின் ஒவ்வொரு அப்டேட் வருவதற்கு முன்னதாகவும் தளபதி ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்து வரும் வேலையை இதுவரை கச்சிதமாக செய்து வருகிறார் ரத்னகுமார். இவரும் சாந்தனுவும் இணைந்து சமூக வலைதளங்களில் அடிக்கின்ற லூட்டிக்கு அளவே இல்லை.

தளபதி கில்லி

தளபதி கில்லி

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கில் இருந்து நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று சோதனை நடத்தியது. அவரது ரசிகர்களை மட்டுமின்றி மாஸ்டர் படக்குழுவையும் வெகுவாக பாதித்தது. இந்நிலையில், தற்போது பேசிய ரத்னகுமார், "ரெய்டு வந்தாலும் சரி.. ரெய்டு போனாலும் சரி தளபதி விஜய் கில்லி பிளேயர்" அவர் தான் ஜெயிப்பார் என அரங்கத்தை அலறவிட்டுள்ளார்.

ரொம்ப கஷ்டமான வேலை

ரொம்ப கஷ்டமான வேலை

மாஸ்டர் படத்துக்கு வேலை செய்ய வந்ததை நினைத்து சந்தோசப்பட்டுக் கொண்டு இருந்த எனக்கு, நண்பன் லோகேஷ் கனகராஜ், கொடுத்த ஒரே ஒரு வேலை தான் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்தது. அது என்னன்னா தளபதி ரசிகர்களை கன்ட்ரோல் பண்ணும் வேலை. சமூக வலைதளங்களில் தீயாய் இருக்கும் அவர்களை கன்ட்ரோல் பண்ணுவது ரொம்ப கஷ்டம் என கலகலப்பாக பேசினார்.

அண்ணன் தான் ஜெயிப்பாரு

அண்ணன் தான் ஜெயிப்பாரு

மாஸ்டர் படத்திற்கு எழுத்து பணிகளில் பணிபுரிந்த பொன் பார்த்திபன் பேசும் போது, ரெய்டு வந்தாலும் சரி, ரெய்டு போனாலும் சரி அண்ணன் தான் ஜெயிப்பாரு என ஆக்ரோஷமாக பேசி, தளபதி விஜய் அந்த ரெய்டு பத்தி அப்படி என்னதான் பேசப் போகிறார் என்ற ஹைப்பை சரியான அளவில் பேசி அசத்தினர். அர்ஜுன் தாஸ், கவுரி கிஷன் உள்ளிட்ட பலரும் மாஸ்டர் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X