கில்லி ‘சூரத்தேங்கா" பாட்டுக்கு அப்புறம்.. இதுதான்.. ’வாத்தி கம்மிங்’ குறித்து ரத்னகுமார் ட்வீட்!

சென்னை: மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான 'வாத்தி கம்மிங் ஒத்து' பாடல், கில்லி படத்தின் ஓபனிங் பாடலுக்கு அப்புறம் ரொம்ப ஸ்பீடாக இருக்கு என ரத்னகுமார் ட்வீட் போட்டுள்ளார்.

Recommended Video

Master song| Vaathi Coming |review| Vijay

விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷன், விஜே ரம்யா, ஸ்ரீமன், ஸ்ரீநாத், அர்ஜுன் தாஸ், ரமேஷ் திலக், செளந்தர்யா, சேத்தன், பிரேம் குமார் என நட்சத்திர பட்டாளமே மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றனர்.

மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடலான 'வாத்தி கம்மிங் ஒத்து' பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

லிரிக்ஸ் கம்மி

லிரிக்ஸ் கம்மி

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர், இந்துஜா, அம்ரிதா அய்யர், விவேக், யோகி பாபு மற்றும் ஜாக்கி ஷெராஃப் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில், "பிகிலு பிகிலு பிகிலும்மா" பாடல் பார்ட்டி டான்ஸ் ஆக குறைவான லிரிக்ஸ் மற்றும் அதிக இசையுடன் உருவாகி இருந்தது. அதே போலத்தான் தற்போது வெளியாகியுள்ள "வாத்தி கம்மிங்" பாடலிலும் லிரிக்ஸ் கம்மி.

பாட்டே இல்லை

பாட்டே இல்லை

மாநகரம் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்தியை வைத்து இயக்கிய கைதி படத்தில், பாடல்களே இல்லை. ஆனாலும், படம் வேற லெவலில் வெற்றி பெற்றது. இந்நிலையில், தளபதி ரசிகர்களை குஷி படுத்தும் நோக்கத்திலேயே மாஸ்டர் படத்தில் சில பாடல்களை அனிருத் உருவாக்கி உள்ளார்.

ரொமான்டிக் சாங்

ரொமான்டிக் சாங்

பிகில் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான "உனக்காக வாழ நினைக்கிறேன்" பாடல் ரொம்ப ரொமான்டிக் பாடலாக உருவாகி இருந்தது. இந்நிலையில், மாஸ்டர் படத்திலும், விஜய், மாளவிகா மோகனன் இடையே ஒரு ரொமான்டிக் பாடல் இருக்கிறது என்றும், அந்த பாடலைத் தான் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்ற தகவலும் கசிந்துள்ளது.

கில்லிக்கு அப்புறம்

தரணி இயக்கத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் விஜய், திரிஷா நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான படம் கில்லி. அந்த படத்தின் ஓபனிங் பாடலான "சூரத்தேங்காய் அட்றா அட்றா" பாடலுக்கு அப்புறம் செம ஸ்பீடான ஒரு பாடலாக "வாத்தி கம்மிங் ஒத்து" பாடல் உருவாகி இருப்பதாக அப்டேட் கிங் ரத்னகுமார் ட்வீட் போட்டுள்ளார்.

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்

மாஸ்டர் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடலில், தமிழ், ஆங்கிலம் கலந்த பாசிட்டிவ் ஆன வரிகளை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியிருந்தார். காக்கா பாலா எழுதி, பாடியுள்ள செகண்ட் சிங்கிள், "வாத்தி கம்மிங் ஒத்து" பாடலில், வரிகள் இல்லை என்ற வருத்தம் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. பார்த்திபன், வடிவேலு காமெடியான இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் மீமை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

எப்படி அனி?

மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிளான வாத்தி கம்மிங் ஒத்து பாடலை கேட்ட நடிகை மாளவிகா மோகனன், எப்படி அனிருத், இப்படி ஒரு வெறித்தனமான குத்து பாடலை இசையமைத்துள்ளீர் என ட்வீட் போட்டுள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழே ரசிகர்கள் தலைவி என்றும், நீங்க தளபதி கூட ஆடுற பாட்டை எப்போ காட்ட போறாங்க என்றும் கேட்டு வருகின்றனர்.

தியேட்டரில் தெறிக்குது

சென்னையில் சில தியேட்டர்களில் வாத்தி கம்மிங் ஒத்து பாடலை பிரத்யேகமாக ரசிகர்களுக்கு திரையிட்டுள்ளனர். விஜய் ரசிகர்கள், இப்போதே, தியேட்டரில் வெறித்தனமாக அந்த பாடலுக்கு நடனமாடியும், மொபைல் ஃபிளாஷ் அடித்தும், கொண்டாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X