’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
சென்னை: 100 கோடி, 150 கோடி சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்துக்கு 'கூலி' என டைட்டில் வைத்திருக்கும் நிலையில், "இன்னும் நீ என்னை பைத்தியக்காரனாவே நினைச்சிட்டு இருக்கியா" என ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் லோகேஷ் கனகராஜின் நண்பரும் மாஸ்டர், லியோ படங்களில் வசனகர்த்தாவாக செயல்பட்ட ரத்னகுமார் 'கூலி' படம் குறித்து போட்ட ட்வீட் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
தலைவர் 171வது படத்தில் லோகேஷ் கனகராஜுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், அந்த படம் வெற்றிப் படமாக மாற வேண்டும் என ரத்னகுமார் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் "காக்கா, கழுகு" என சொல்லி விட்டு ஒரு செகண்ட் சிரித்து ரவுண்டு அடித்து வந்து பேசியதை கூட ரஜினிகாந்த் ரசிகர்கள் பொறுத்துக்கொள்வார்கள். ஆனால், எவ்ளோ உயர பறந்தாலும் பசிச்சா கீழ வந்து தான் ஆகணும் என ரத்னகுமார் பேசியது ரஜினிகாந்தை டார்கெட் செய்து தான் என அடித்து நொறுக்க ஆரம்பித்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எப்போதும் ரத்னகுமாரை மன்னிக்கவே மாட்டோம் என அடி வெளுத்து வருகின்றனர்.
இயக்குநர் ரத்னகுமார்: மேயாத மான் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரத்னகுமார். முதல் படமே அவருக்கு வெற்றிப் படமாக மாறியது. வைபவ், பிரியா பவானி சங்கர் நடித்த அந்த படத்தின் "எங்க வீட்டு குத்துவிளக்கு" பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அந்தப் படத்தை தொடர்ந்து அமலா பால் ஆடையின்றி போல்டாக நடித்த ஆடை படத்தை ரத்னகுமார் இயக்கி இருந்தார். அந்த படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சந்தானத்தை வைத்து குலு குலு படத்தை இயக்கினார். அந்த படம் தோல்வியை தழுவியது.
லோகேஷ் கனகராஜின் நண்பர்: மாஸ்டர், லியோ படங்களில் லோகேஷ் கனகராஜின் நண்பரான ரத்னகுமார் பணியாற்றினார். அப்டேட் கிங் என்றே விஜய் ரசிகர்கள் இவருக்கு பெயர் வைத்தனர். அந்தளவுக்கு படம் குறித்த பல அப்டேட்களை இவர் வெளியிட்டு விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வந்தார்.
சர்ச்சையில் சிக்கிய ரத்னகுமார்: லியோ படத்தின் வெற்றி விழாவில் ரத்னகுமார் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை அழ வைத்து விட்டார் ரத்னகுமார் என விஜய் ரசிகர்கள் ரத்னா தாஸ் என ஒரு பக்கம் இவரது எடிட் வீடியோக்களை டிரெண்ட் செய்தனர். தலைவர் 171வது படத்தில் இவர் பணியாற்றக் கூடாது என ரஜினிகாந்த் ரசிகர்கள் சொன்னதை போலவே இவர் இதில், பணியாற்றாமல் அடுத்து தான் இயக்கப் போகும் படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
1000 கோடி வசூல்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக கூறப்படும் நிலையில், 4 டிஜிட் வசூலை 'கூலி' படம் ஈட்ட வேண்டும் என அதன் டைட்டில் இன்ட்ரோ வீடியோவை பார்த்ததும் ட்வீட் போட்டுள்ளார் ரத்னகுமார்.
ரத்னகுமார் ட்வீட்: சூப்பர் ஸ்டார் படத்திற்கு பக்காவான டைட்டில் கூலி. கருப்பு மற்றும் தங்க நிறத்தை ரஜினிகாந்த்துக்காக பயன்படுத்திய விதம் அனிருத் மியூசிக், டிஸ்கோ பாடல் என ஆரம்பமே அதிர்கிறது. கண்டிப்பாக இந்த படம் 1000 கோடி வசூல் ஈட்டும் என பதிவிட்டுள்ள ரத்னகுமார், "முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" என்கிற பழமொழியையும் ஷேர் செய்துள்ளார். மேலு, தனக்கு பதிலாக இந்த படத்தில் வசனகர்த்தாவாக மாறியுள்ள இயக்குநர் சந்த்ரு அன்பழகனையும் டேக் செய்து ரொம்ப சந்தோஷம் என பதிவிட்டுள்ளார்.

யோவ் மிலிட்ரி நீ எங்க?: ரத்னகுமாரின் ட்வீட்டுக்கு கீழ் ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் அவரை திட்டி கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் "முடிச்சிடலாமா" என கூலி பஞ்ச் வசனத்தை வைத்தே கலாய்த்து வருகின்றனர். ரத்னகுமார் ட்வீட்டுக்கு கீழ் ரஜினிகாந்த் மற்றும் விஜய் ரசிகர்கள் தங்கள் சண்டையையும் ஆரம்பித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











