twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காட்டுமிராண்டித்தனமா இருக்கு.. கொரோனா பாதிப்பு நமக்கு தேவைதான்.. பொங்கிய மாஸ்டர் ரைட்டர்!

    |

    சென்னை: மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வந்த சுகாதார பணியாளர்களை கல்லெறிந்து விரட்டிய மக்களை பார்த்து கொதித்து போய் ட்வீட் போட்டுள்ளார் மாஸ்டர் பட ரைட்டர் ரத்னகுமார்.

    Recommended Video

    கோ கொரோனா கோ.. கொடிய வைரஸை விரட்ட.. அகில உலக சூப்பர்ஸ்டாரின் அசத்தலான வீடியோ!

    மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்திற்கு வசனம் எழுதி உள்ளார்.

    இரண்டாவது கணவர் மீது கோபமாக இருக்கும் அமலா பால்.. என்ன காரணம் தெரியுமா? இன்றை டாப் 5 பீட்ஸில்!இரண்டாவது கணவர் மீது கோபமாக இருக்கும் அமலா பால்.. என்ன காரணம் தெரியுமா? இன்றை டாப் 5 பீட்ஸில்!

    Rathnakumar tweeted, “We deserve this virus to teach us something”

    சமூக வலைதளத்தில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் ரத்னகுமார், தளபதி ரசிகர்களுக்கு மாஸ்டர் அப்டேட்டை அவ்வப்போது கொடுத்து வந்து, ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்.

    கொரோனா பாதிப்பால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போடப்பட்டுள்ள நிலையில், கொரோனா குறித்த விழிப்புணர்வு பதிவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்னகுமார் பதிவிட்டு வருகிறார்.

    இந்நிலையில், ANIல் வெளியிடப்பட்ட, செய்தியை பார்த்து அதிர்ந்து போய் ட்வீட் போட்டுள்ளார் ரத்னகுமார்.

    மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் பொது மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்ற பரிசோதனையை மேற்கொள்ள வந்த சுகாதார பணியாளர்களை கல்லெடுத்து அடித்து, ஓட ஓட விரட்டும் வீடியோ நெஞ்சை பதற வைக்கிறது.

    இதனை பார்த்த ரத்னகுமார், கொஞ்சம் கூட மனிதத் தன்மையே இல்லையா.. என்னவொரு காட்டுமிராண்டித் தனம்.. நமக்கெல்லாம் கொரோனா போன்ற வைரஸ் தக்க பாடம் கொடுத்தாலும் சில மனிதர்கள் திருந்தவே மாட்டார்கள் இது போன்ற வைரஸ் பாதிப்பு தேவை தானோ என சில நேரம் எண்ணத் தோன்றுகிறது என கோபமாக பதிவிட்டுள்ளார்.

    English summary
    Master writer Rathnakumar angrily tweeted, Where is Humanity? Why are we Barbaric. It's so heartbreaking to see this Broken heart. Sometimes I get a feeling like we deserve this virus to teach us something.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X