29 Box Office: சிஎம் ஆகாத விஜய் தியேட்டரை சீண்டாத ரசிகர்கள்.. 29 முதல் நாள் வசூல் என்ன?
சென்னை: லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட இயக்குநர்கள் இணைந்து தயாரித்த 29 படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார். விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மே 7ம் தேதி பதவி ஏற்று விடுவார். நம்ம படத்துக்கு எந்த பிரச்னையும் இருக்காது என தப்பான ரிலீஸ் தேதியில் படத்தை வெளியிட்டு சிக்கிக் கொண்டது படக்குழு என்கின்றனர்.
நடிகர்கள் விது, ப்ரீத்தி அஸ்ரானி, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள 29 படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், முதல் நாள் இந்த படத்துக்கு பல விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்திருந்தனர்.

ஆனால், விதி வலியது என்பது போல தமிழ்நாட்டில் நிலவி வரும் அரசியல் அசாதாரண சூழல் காரணமாக ரசிகர்கள் செய்தி சேனலை தாண்டி எதையுமே பார்க்கும் மனநிலையில் இல்லை என்பதால் 29 படத்தின் வசூல் முதல் நாளே படுத்து விட்டது.
29 படத்தின் பட்ஜெட்: லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் இணைந்து ரத்னகுமாரின் 29 படத்தை அதிகபட்சமாக 4 கோடி ரூபாயில் உருவாக்கியுள்ளனர். முதல் நாள் வசூல் ஒரு கோடி வந்தாலும், 3 நாட்களில் படத்தின் பட்ஜெட்டை படம் கவர் செய்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் நாள் வசூல் மிகவும் குறைவாகவே வந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
29 முதல் நாள் வசூல்: விது, ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள காதல் டிராமாவான 29 திரைப்படம் முதல் நாளில் அதிகப்படியாக 30 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சனிக்கிழமையான இன்றாவது விஜய் பதவி ஏற்று விடுவார். மக்கள் சனி, ஞாயிறு படத்தை பார்க்க வந்தாலாவது தப்பித்து விடலாம் என நேற்று இரவு ரத்னகுமார் உள்ளிட்ட 29 படக்குழுவினர் பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் விஜய் சிஎம் ஆவதில் தொடர்ந்து இழுபறி நிலவி வரும் நிலையில், சனி, ஞாயிறும் வசூல் டல் அடித்தால் படத்தின் சோலி முடிஞ்சு என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேயாத மான் படத்திற்கு பிறகு ரத்னகுமார் ஒரு பெரிய வெற்றிக்காக பல வருடங்களாக உழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications